அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் annauniv.edu-ல் வெளியீடு
New Delhi: கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற்ற இறுதிப் பருவத் தேர்வுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இளங்கலை (UG) மற்றும் முதுகலை (PG) பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கான இந்த தரவரிசை பட்டியலை annauniv.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்துக்கொள்ளலாம்.
அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் 2019: இங்கே காணலாம்
Anna University UG ranklist 2019
Anna University PG ranklist 2019
இந்த தரவரிசைப் பட்டியல் விவரமானது பாட வாரியாகி வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில், அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் பயிலும் முதுநிலை மற்றும் இளநிலை பொறியியல் மாணவர்களுக்கு தத்துவவியல் பாடத்திட்டம் அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக்குழுமத்தின் அறிவுறுத்தலின்படி நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகின.
இந்த தத்துவவியல் பாடத்திட்டத்தில் சமஸ்கிருதம் உள்பட பகவத் கீதை தொடர்பான பாடங்களும் இடம்பெற்று இருந்தன. மேலும் அதை மாணவ-மாணவிகள் கட்டாயம் படிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதனால் பெரும் சர்ச்சை கிளம்பியது. இந்த பாடத்திட்டத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், 'அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரிகளில் 2019-ம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் தத்துவப்பாடம் கட்டாயமாக்கப்பட்டு, அதில் இந்திய-மேல்நாட்டு தத்துவப்படிப்பு என்ற பெயரில் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்திருந்தார்.
Click here for more Education News
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)