டெல்லியில் கொரோனா பாதிப்பால் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹைலைட்ஸ்
- மொஹல்லா மருத்துவமனையில் மற்றொரு மருத்துவருக்கு கொரோனா!
- ஏற்கனவே அங்கு ஒரு மருத்துவர் அவரது மனைவி, மகளுக்கு கொரோனா இருந்தது.
- அரவிந்த் கெஜ்ரிவால் அரசு ஏற்படுத்தியது மொஹல்லா மருத்துவமனைகள்
Delhi: டெல்லி மொஹல்லா மருத்துவமனையில் மற்றொரு மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, டெல்லி மக்கள் நல மொஹல்லா மருத்துவமனையில் 49 வயது மருத்துவர் அவரது மனைவி, மகள் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அந்த மருத்துவருடன் தொடர்பிலிருந்த சுமார் 900 பேர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இன்று மொஹல்லா மருத்துவமனையில் மேலும், ஒரு மருத்துவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, டெல்லியின் பாபர்பூரில் உள்ள மக்கள் நல மருத்துவமனைக்கு வெளியே ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பில், கடந்த மார்ச் 12 முதல் மார்ச் 20ம் தேதி வரை மருத்துவமனைக்கு வருகை தந்த நோயாளிகள் அனைவரும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு தங்கள் வீடுகளில் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
மொஹல்லா மருத்துவமனைகள் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு ஏற்படுத்திய சமூகத்தில் நலிவுற்றோருக்கான ஆரம்ப சுகாதார மையங்களாகும்.