முன்னதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அக்சய் படேல், ஜிது சவுத்ரி ஆகியோர் நேற்று முன்தினம் மாலை தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
ஹைலைட்ஸ்
- நாடு முழுவதும் ஜூன் 19-ம் தேதி மாநிலங்களவை எம்.பி. தேர்தல் நடக்கிறது
- குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து வருகின்றனர்
- மார்ச்சில் இருந்து இதுவரை 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா
Ahmedabad: நாடு முழுவதும் ஜூன் 19-ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் குஜராத் மாநிலத்தில் காங்கிரசை சேர்ந்த எம்எல்ஏ பிரிஜேஷ் மெர்ஜா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மெர்ஜாவின் ராஜினாமாவை சட்டமன்ற சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி ஏற்றுக் கொண்டதாக சட்டமன்ற செயலர் தெரிவித்துள்ளார். மோர்பி சட்டமன்ற தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக பிரிஜேஷ் மெர்ஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஏற்கனவே 2 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்திருப்பதால் காங்கிரஸ் கட்சி கடும் அதிர்ச்சியில் இருந்தது. இந்தநிலையில் அடுத்ததாக இன்னொரு உறுப்பினரும் ராஜினாமா செய்துள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அக்சய் படேல், ஜிது சவுத்ரி ஆகியோர் நேற்று முன்தினம் மாலை தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வது தொடர்கதையாகி வருகிறது. மெர்ஜாவுடன் சேர்த்து மொத்தம் 8 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)