This Article is From Jun 17, 2019

பாகிஸ்தான் மீது மற்றுமொரு துல்லிய தாக்குதல்..! இந்திய அணியை பாராட்டிய அமித்ஷா

ரோஹித் சர்மா 140 மற்றும் விராட் கோலி 77 என இந்திய அணி வீர ர்களின் சிறப்பான ஆட்டத்தால், 336 ரன்களை இந்திய பெற்றது. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான், 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் மட்டுமே பெற்றது.

பாகிஸ்தான் மீது மற்றுமொரு துல்லிய தாக்குதல்..! இந்திய அணியை பாராட்டிய அமித்ஷா

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை தொடர்ந்து, அமித்ஷா ட்விட்டரில் பாராட்டு.

New Delhi:

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 89 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்திய அணி வீரர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய மற்றொரு தாக்குதலில் முன்னது போன்ற அதே முடிவுகளை பெற்றுள்ளோம் என அமித்ஷா கூறியிருந்தார்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகின்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 140, விராட் கோலி 77, கே.எல்.ராகுல் 57 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் 3 விக்கெட் சாய்த்தார்.

இதைத்தொடர்ந்து, 337 ரன்கள் என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடியது. அந்த அணியில் இமாம் உல் ஹாக், ஃபகர் ஜமான் களமிறங்கினர். இமாம் 7 ரன்னில் விஜய் சங்கர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். புவனேஸ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்டதால், அவரது ஓவரில் மீதமிருந்த இரண்டு பந்துகளை வீச விஜய் அழைக்கப்பட்டார். அவர் வீசிய முதல் பந்திலே அந்த விக்கெட்டை எடுத்தார்.

தொடர்ந்து, கடின இலக்கை அடைய முடியாமல் போராடிய பாகிஸ்தானின் ஆட்டம் மழையால் தடைபட, விதிப்படி இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இந்தியாவின் வெற்றி குறித்து தலைவர்கள் தங்களது டிவிட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்தனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பதிவில், 'பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய மற்றொரு துல்லிய தாக்குதலில், முன்னது போன்ற அதே முடிவுகளை பெற்றுள்ளோம்' .

மிகச்சிறந்த ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தியுள்ளது. இது ஒவ்வொரு இந்தியனையும் கவர்ந்துள்ளது என அமித்ஷா கூறியிருந்தார்.

இதேபோல், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பதிவில், இந்திய அணி மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்திய அணியை எண்ணி பெருமைப்படுகிறேன் என்று வாழ்த்து தெரிவித்தார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டு, அம்மாநில துணை முதல்வர் சச்சின் பைலட், உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.

ஆம் ஆத்மி கட்சி தனது ட்விட்டர் பதிவில், நமது வீர ர்கள் தவிர்க்க முடியாது சக்தியாகி உள்ளனர். மீண்டும் ஒருமுறை இந்தியா இதனை உறுதிப்படுதியுள்ளது. இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் ஜம்மு - காஷ்மீர் முதல்வர் மெகபூபா தனது ட்விட்டரில், இந்தியாவை பெருமைப்பட வைத்த இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

.