This Article is From Nov 30, 2019

பெண் மருத்துவர் கொல்லப்பட்ட அதே பகுதியில் எரிந்த நிலையில் மற்றொரு பெண் சடலம்!

அடுத்தடுத்து, இரண்டு சடலங்களும், ஹைதராபாத் அருகே உள்ள ஷம்ஷாபாத்தில் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனினும், இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற விவரங்கள் தெரியவில்லை.

பெண் மருத்துவர் கொல்லப்பட்ட அதே பகுதியில் எரிந்த நிலையில் மற்றொரு பெண் சடலம்!

பிரேத பரிசோதனைக்காக அந்த பெண்ணின் சடலம் மருத்துவமனை எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Hyderabad:

ஐதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட அதேபகுதியில், மற்றொரு பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சைதராபாத் காவல் ஆணையர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ஷம்ஷாபாத்தின் புறநகர் பகுதியில் இந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு உடல் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறோம் என்று கூறியுள்ளார். 

ஷம்ஷாபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் கொலப்பட்ட அதேபகுதியில் சில கி.மீ தூரத்தில் இந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனினும், இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற விவரங்கள் தெரியவில்லை. 

கால்நடை பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக எரித்துக்கொலை செய்யப்பட்ட முதல் சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில், அதேபோல இரண்டாவது சம்பவம் நிகழ்ந்துள்ளதா என பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

கடந்த புதன்கிழமையன்று ஐதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் தனது பணியை முடித்து வீடு திரும்பும் வழியில் மாயமாகியுள்ளார். இதையடுத்து, நடந்த விசாரணையில், சம்பவம் நடந்த அன்று மாலை நேரத்தில் தனது வீட்டில் இருந்து அவசர பணி காரணமாக மருத்துவனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற கால்நடை மருத்துவர் தனது வாகனத்தை சுங்கச்சாவடி அருகே நிறுத்திவிட்டு கால்டாக்சியில் சென்றுள்ளார்.  

இதையடுத்து, பணியை முடித்து 9 மணி அளவில் திரும்பி வந்த அவர், தனது இருசக்கர வாகனத்தை எடுத்தபோது, அது பஞ்சர் ஆகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 9.15 மணி அளவில் தனது சகோதரிக்கு அந்த பெண் மருத்துவர் செல்போனில் தொடர்புகொண்டுள்ளார். அப்போது, தனது இருசக்கர வாகனம் பஞ்சர் ஆனதாகவும், அதனை சிலர் பஞ்சர் பார்த்து தருவதாக கூறி எடுத்துச்சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். 

எனினும், அங்கு சில லாரி ஒட்டுநர்கள் அநாகரிமான முறையில் பார்த்து வருவதாகவும் இதனால், தனக்கு பயமாக இருப்பதாகவும் சகோதரியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சில நிமிடங்களிலேயே அவரது போன் சுவிட்ச் ஆஃப் ஆகியுள்ளது என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தொடர்ந்து, இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய 4 லாரி ஓட்டுநர்கள் கைது செய்யபட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

.