This Article is From May 31, 2018

அண்டார்ட்டிக்காவில் மன்ஹாட்டன் தீவை விட ஆழமான மலைப் பள்ளத்தாக்குகள்

அண்டார்டிக்காவின் பரந்த பனிக்கட்டி அடியில் நூறு மைலுக்கு  நீளமான  மலைத்தொடர்கள் மற்றும் பள்ளத்தாக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்

அண்டார்ட்டிக்காவில் மன்ஹாட்டன் தீவை விட ஆழமான மலைப் பள்ளத்தாக்குகள்
மேற்கு அண்டார்டிக்காவின் பரந்த பனிக்கட்டி அடியில் நூறு மைலுக்கு  நீளமான  மலைத்தொடர்கள் மற்றும் பள்ளத்தாக்குகள் இருப்பதாகவும்; இவை உலக கடல் மட்ட உயர்வுக்கு அதிக பங்களிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  

பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் குழு "ஐஸ் பெனிடிரேடிங் ராடார்-ஐ" பயன்படுத்தி உறைந்த கண்டத்தின் கடந்த, தற்போதைய மற்றும் எதிர்கால நடத்தையை கணித்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் அண்டார்டிக்காவின்   இரண்டு முக்கிய பகுதிகளை இணைக்கும் மூன்று பள்ளத்தாக்குகளை கண்டுபிடித்தனர்: மேற்கு அண்டார்டிக் ஐஸ் ஷீட் மற்றும் மிகப்பெரிய கிழக்கு அண்டார்டிக் ஐஸ் ஷீட்.

புதிதாக கண்டுபிடிக்க படுத்த நில படிவங்கள் கிழக்கு அண்டார்க்டிக்கா மற்றும் கடலோர பகுதி வழியாக பாயும் பனியை தடுக்கிறது. 

"கிழக்கத்திய மற்றும் மேற்கு அண்டார்க்டிக்கா பனிப்பொழிவுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை புரிந்துகொள்வது கடந்தகால, தற்போதைய மற்றும் எதிர்கால உலகளாவிய கடல் மட்டத்தைப் பற்றிய நமது புரிதலை அடிப்படையாகக் கொண்டது" என நியூ கேஸ்டல் மூத்த பேராசிரியர் நெயில் ரோஸ் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் PolarGAP திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது; பூமியின் உலகளாவிய புவியீர்ப்புத் துறையைப் பற்றிய தகவல்களை சேகரிக்க இத்திட்டம் தொடங்கப்பட்டது. 

இந்த புதிய PolarGAP தரவு, ஐஸ் தாக்கத்தின் கீழ் நிலப்பரப்பு பனிப்பாதைக்கு எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதைப் பற்றிய இரு நுண்ணறிவுகளை நமக்கு வழங்கும். அதனால் இந்த கண்டுபிடிப்பு ஆராய்ச்சியாளர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
.