3 ஆண்டு திருமண வாழ்க்கையில் இப்போதுதான் அனுஷ்கா முதல் முறையாக கர்ப்பமாகியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவுக்கும் முதல் குழந்தை பிறக்க இருக்கிறது. இது குறித்த தகவலை கோலி, தனது சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார். விராட் கோலி, தன் ட்விட்டர் பக்கத்தில், “இனி நாங்கள் மூன்று பேர். ஜனவரி 2021 ஆம் ஆண்டு புது வரவு” என்று கூறியுள்ளார்.
அனுஷ்கா ஷர்மாவும், விராட் கோலியுடன் தான் கர்ப்பமாக உள்ள படத்தைப் பகிர்ந்து, “இனி நாங்கள் மூன்று பேர்! ஜனவரி 2021ல் அரைவிங்” என்று பதிவிட்டு இதய இமோஜியைப் பறக்கவிட்டார்.
கோலியும் அனுஷ்காவும் இப்படி ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை தெரிவித்த உடன், ட்விட்டரில் #Virushka என்ற ஹாஷ்-டேக்கில் மீம்ஸ்களை நெட்டிசன்கள் அள்ளிவிடத் தொடங்கியிருக்கின்றனர். பலரும் இளம் ஜோடிக்கு வாழ்த்துச் செய்திகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
அதில் சில வைரல் பதிவுகளையும் மீம்ஸ்களையும் பார்க்க:
விராட் கோலி ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதையெல்லாம் சிலர் கற்பனை செய்துள்ளனர்.
சில ரசிகர்கள், பழைய நினைவலைகளை பகிர்ந்து நெகிழ்ந்துள்ளனர்.
பல ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்த கோலியும் அனுஷ்காவும், கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 3 ஆண்டு திருமண வாழ்க்கையில் இப்போதுதான் அனுஷ்கா முதல் முறையாக கர்ப்பமாகியுள்ளார்.
விராட் - அனுஷ்கா ஜோடியின் பதிவிற்கு ஆலியா பட், பிரயங்கா சோப்ரா, வருண் தவான், கியாரா அத்வானி, டாப்ஸி, பிரீத்தி ஜிந்தா உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.