বাংলায় পড়ুন Read in English
This Article is From Oct 11, 2019

குடும்படுத்துடன் ஆர்எஸ்எஸ் நிர்வாகி கொடூரமாக கொலை: கொதித்தெழுந்த இயக்குநர் அபர்ணா சென்!

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, எனினும் தொடர்ந்து விசாரணைகள் நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement
இந்தியா Edited by

ஆர்எஸ்எஸ் நிர்வாகி குடும்பத்துடன் கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு காரணம் எதுவாக இருந்தாலும், அது நமக்கு பெரும் அவமானம்.. முதல்வர் மேடம் என திரைப்பட இயக்குநர் அபர்ணா சென் கொதித்தெழுந்துள்ளார். 

மேற்குவங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர், தனது கர்ப்பிணி மனைவி மற்றும் 6 வயது மகனுடன் அவரது வீட்டிலே கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பந்து பிரகாஷ் பால் (35), இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி பியூட்டி (30), மகன் ஆர்யா (6), இவர்கள் மூவரும் வீட்டிலே ரத்தம் தெறிக்க சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இதில் உயிரிழந்த அந்த பெண் கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்துள்ளது. கொல்கத்தாவில் இருந்து 210 கி.மீ தொலைவில் உள்ள ஜியாஜாங்கில் விஜயதசமி மற்றும் தசரா கொண்டாடப்பட்ட அதே நாளில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, எனினும் தொடர்ந்து விசாரணைகள் நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்படுவதற்கு முன்பு மூவருக்கும் போதை பொருள் வழங்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

Advertisement

இந்த கொலை விவகாரம் தற்போது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களால், அரசியல் விவகாரமாக விஷ்வரூபம் எடுத்துள்ளளது. கொலை செய்யப்பட்ட பந்து பால், ஆர்எஸ்எஸ் நிர்வாகி என்றும் அவர் சமீபத்தில் தான் அதில் இணைந்தார் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கொலை செய்யப்பட்டவர்களின் சடலங்கள் வீடியோவாகவும், புகைப்படமாகவும், சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இந்த விவகாரம் தொடர்பாக பாஜக செய்திதொடர்பாளர் சம்பித் பத்ரா தனது ட்வீட்டர் பதவில், அந்த வீடியோவை பகிர்ந்து மேற்குவங்கத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இது இது எனது மனசாட்சியை உலுக்கியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

இந்த கொலை, அடையாளம் தெரியாத நபர்களால் நடந்துள்ளதாகவும், இதற்கு எந்தவொரு இனவாத அல்லது அரசியல் முடிச்சுகளையும் ஏற்க முடியாத என போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரழந்த குடும்பத்தினரின் சொத்து விவரங்கள் மற்றும் தனிப்பட்ட உறவு முறைகள் அனைத்தும் ஆராயப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விஜயதசமி பூஜையில் இந்த குடும்பத்தினர் பங்கேற்காததால், அக்கம்பக்கத்தினர் அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது, அவர்கள் கதவை உள்பக்கமாக பூட்டி இருந்ததும், நீண்ட நேரம் தட்டியும் திறக்காமல் இருந்ததால், சந்தைகமடைந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 


விஜயதசமி பூஜையில் இந்த குடும்பத்தினர் பங்கேற்காததால், அக்கம்பக்கத்தினர் அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது, அவர்கள் கதவை உள்பக்கமாக பூட்டி இருந்ததும், நீண்ட நேரம் தட்டியும் திறக்காமல் இருந்ததால், சந்தைகமடைந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

Advertisement

இதுதொடர்பாக திரைப்பட இயக்குநர் அபர்ணா சென் தனது ட்வீட்டர் பதிவில், இத்தகைய கொடூரமான செயலுக்கு காரணம் எதுவாக இருந்தாலும், அது நமக்கு பெரும் அவமானம்.. முதல்வர் மேடம்..! குற்றவாளிகள் நீதிக்கு முன் கொண்டு வரப்படுவதை உறுதிசெய்யப்பட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு மேற்குவங்கத்தில் அனைத்து குடிமக்களுக்குமான முதல்வராக செயல்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

Advertisement