This Article is From Jul 27, 2019

''பட்டாக் கத்தியால் மரக்கன்று நடுபவர்களே மாணவர்கள்'' : விவேக் பேச்சு!

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

''பட்டாக் கத்தியால் மரக்கன்று நடுபவர்களே மாணவர்கள்'' : விவேக் பேச்சு!

அப்துல் கலாம் நினைவு தினத்தையொட்டி மரக்கன்றுகள் பல்வேறு இடங்களில் நடப்படுகின்றன.

பட்டாக்கத்தியை தூக்கித் திரிபவர்கள் மாணவர்கள் அல்ல என்றும், அந்த கத்தியால் மரக் கன்றுகளை நடுபவர்களே மாணவர்கள் என்றும் நடிகர் விவேக் கூறியுள்ளார். 

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பூந்தமல்லி ரூட் மாணவர்களை, பாரிமுனை ரூட் மாணவர்கள் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதல் நடத்தினர். இதில் 7 பேருக்கு காயம் ஏற்பட்டது. 

இந்த விவகாரம் தொடர்பாக 2 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும் என எச்சரிக்கப்பட்டது. 

இந்த நிலையில் முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த தினமான இன்று திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் விவேக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது-

அரிவாள் தூக்குபவர்கள் மாணவர்கள் அல்ல. பட்டாக்கத்தியை தூக்குபவர்கள் மாணவர்கள் அல்ல. கலவரம் செய்பவர்கள் மாணவர்கள் அல்ல. யார் மாணவர்கள் என்றால் அதே அரிவாளை வைத்து நிலத்தில் தோண்டி செடியை நடுபவர்கள் மாணவர்கள். அதே பட்டாக்கத்தியை வைத்து பாத்தி கட்டி தண்ணீர் விட ஏற்பாடு செய்பவர்கள் மாணவர்கள். 
இவ்வாறு அவர் பேசினார். 


 

.