This Article is From Jul 15, 2018

ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அப்போலோ மருத்துவமனை அறை ஆய்வு செய்யப்பட உள்ளது

அவசரப் பிரிவு, ஐசியு யூனிட், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் வி.கே. சசிகலா மருத்துவமனையில் பயன்படுத்திய தளங்களும் ஆய்வு செய்யப்பட இருக்கிறது

ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அப்போலோ மருத்துவமனை அறை ஆய்வு செய்யப்பட உள்ளது
Chennai:

கடந்த டிசம்பர் மாதம், ஜெயலலிதா அவருடைய மருத்துவமனை படுக்கையில் இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டிருந்ததை அடுத்து இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 2016ல் அனுமதிக்கப்பட்டிருந்த அப்போலோ மருத்துவமனை அறையை, ஜெயலலிதா மரணத்தையும் அவருடைய தோழி சசிகலா தரப்பினரையும் விசாரிக்கும் ஒரு நபர் ஆணையத்தைச் சார்ந்த குழு ஒன்று ஜூலை 29 அன்று விசாரிக்க உள்ளது.

அந்த குழுவை பிரதிநிதுத்துவப் படுத்தும் இரண்டு வழக்கறிஞர்கள், மருத்துவமனை பார்வையிட வேண்டும் என கோரிய மனுவை ஏற்று ஒரு நபர் ஆணையத் தலைவர் நீதிபதி ஆறுமுகசாமி, அவர்களையும் வி.கே சசிகலா தரப்பிலிருந்து இரண்டு வழக்கறிஞர்களையும் ஜூலை 29ம் தேதி ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அறையை பார்வையிட அனுமதியளித்துள்ளார்.

அறையைத் தவிர அவசரப் பிரிவு, ஐசிசியு யூனிட்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் வி.கே. சசிகலா ஆகியோர் மருத்துவமனை வளாகத்தில் பயன்படுத்திய தளங்கள் ஆகிய இடங்களும் ஆய்வு செய்யப்பட இருக்கிறது என ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆய்வு, சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு அதை ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ள ஆதாரத்துடன் ஒப்பிட்டு பார்க்கவேண்டும் என்கிற நோக்கில் செய்யப்பட இருக்கிறது

கடந்த டிசம்பர் மாதம், ஜெயலலிதா அவருடைய மருத்துவமனை படுக்கையில் இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டிருந்ததை அடுத்து இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

அந்த விஷயங்களும், இந்த மாத இறுதியில் குழுவின் வருகையின் போது உறுதிசெய்யப்பட இருக்கிறது.

பல்வேறு தரப்பிலிருந்தும் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டதையடுத்து, நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடந்த ஆண்டு தமிழக அரசால் அமைக்கப்பட்டது.

இந்த குழுவின் விசாரணை வரம்பு செப்டம்பர் 22, 2016 அன்று ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வித்திட்ட சூழ்நிலைகள் தொடங்கி, அதே ஆண்டு டிசம்பர் 5 வரை அவருக்கு கொடுக்கப்பட்டு வந்த சிகிச்சை பற்றியும் உள்ளது.

இந்த சம்பவத்தைப் பற்றிய தகவல் தெரிந்த அல்லது அதில் நேரடி தொடர்புடைய அனைவரையும் தங்களிடம் தகவல் அளிக்க விசாரணை ஆணையம் அழைத்துள்ளது.



(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
.