திமுக தலைவரும் தமிழக எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்றிரவு சென்னை, கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது அப்போலோ மருத்துவமனை நிர்வாகம். அதில், ‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு (27-9-18) கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இடது தொடையில் இருக்கும் ஒரு கட்டியை அகற்ற சிறிய அளவிலான அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அவர் இன்று மதியம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.