বাংলায় পড়ুন Read in English
This Article is From Apr 26, 2019

உ.பி முன்னாள் முதல்வர் மகன் கொலை: திருமணம் ஆன ஒரே ஆண்டில் மனைவி கொடுத்த அதிர்ச்சி!

Rohit Tiwari Murder Case: தடயவியல் அறிக்கை மற்றும் தகவலின் அடிப்படையில் அபூர்வா கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டார். இறுதியில் நான் தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார் என்று காவல்துறை துணை ஆணையர்  ராஜீவ் ரஞ்சன் கூறினார்.

Advertisement
இந்தியா

Rohit Tiwari Death: ரோகித் குடிபோதையில் இருந்ததால் அவரால் இதனை தடுக்க இயலாமல் போயுள்ளது.

New Delhi:

உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் முதல்வராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த என்.டி.திவாரி. இவருடைய மகன் ரோகித் சேகர் (வயது 40) கடந்த ஏப்ரல் 16ம் தேதி அவரது வீட்டில் இறந்து கிடந்தார். ஆரம்பத்தில் மாரடைப்பால் ரோகித் (Rohit Tiwari) மரணமடைந்தார் என்று நம்பப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டது அம்பலமானது.

ஒரு வாரமாக நடைபெற்று வந்த விசாரணையின் முடிவில் என்.டி.திவாரியின் மகன் கொலை சம்பவத்தில் அவரது மனைவி அபூர்வா சுக்லா திவாரியே அவரை கொலை செய்தது தெரிய வந்தது. இன்று டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் அபூர்வாவை காவல்துறையினர் கைது செய்தனர்.

உச்சநீதிமன்ற வழக்கறிஞரான அபூர்வா கடந்த 3 நாட்களாக விசாரணை வளையத்தில் இருந்து வந்தார். தீவிரமான விசாரணையின் முடிவில் தனது கணவனை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

Advertisement

Rohit Shekhar Tiwari : ரோகித் சேகர் திவாரி (வலது) முன்னாள் முதல்வர் என்டி திவாரி(இடது)  (கோப்புப் படம்)

ஏப்ரல் 15ம் தேதி நள்ளிரவில் ரோகித் தொடர்ந்து மது குடித்துக்கொண்டே இருந்த போது கணவன் - மனைவிக்கு இடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பிரச்சனை பெரிதாகியதில் ரோகித்தின் கழுத்தை நெறித்தும், தலையனை வைத்து முகத்தில் அமுக்கியும் அதிகாலை 1 மணியளவில் அவரை கொலை செய்துள்ளார் அபூர்வா. ரோகித் குடிபோதையில் இருந்ததால் அவரால் இதனை தடுக்க இயலாமல் போயுள்ளது.

திருமணத்திற்கு பின்னர் தங்களுக்குள் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததாகவும் இதன் காரணமாகவே அவரை கொலை செய்ததாகவும் அபூர்வா தெரிவித்தார். மேலும் ஒன்றரை மணி நேரத்திற்குள்ளாக ரோகித்தை கொலை செய்துவிட்டு ஆதாரங்களை அழித்துவிட்டு அபூர்வா (Apoorva Shukla Tiwari) அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

Advertisement

அளவுக்கு அதிகமாக குடிக்கும் பழக்கமுடைய ரோகித் எப்போதும் போல குடித்துவிட்டு தூங்குவதாக குடும்பத்தினர் நினைத்துள்ளனர். ஏப்ரல் 16ம் தேதி மாலை 4 மணியளவில் வீட்டு வேலைக்காரர் ஒருவே ரோகித் மரணமடைந்தது குறித்து அவரின் தாயாருக்கு கூறியுள்ளார்.

ரோகித் சேகர் திவாரியின் மனைவி அபூர்வா திவாரி (Apoorva Shukla Tiwari)

ரோகித் சேகரின் தாயார் உஜ்வாலா, ரோகித் சேகரும் அபூர்வாவும் மேட்ரிமோனியல் தளம் மூலமாக சந்தித்து திருமணம் செய்து கொண்டாவர்கள் என்று தெரிவித்தார். ஓராண்டு வரை இருவரும் பழகி வந்த நிலையில் இடையில் எந்தவொரு பேச்சுவார்த்தையும் இல்லாமல் பிரிந்திருந்ததாகவும் கூறினார். கடந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை இருவரும் தொடர்பிலே இல்லாமல் இருந்துள்ளனர். அதன்பின் ஏப்ரல்2  அன்று தன்னை சந்தித்து இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்தாக உஜ்வாலா சர்மா கூறியள்ளார். 

Advertisement

இருவரும் சுமுகமாக பிரிந்து சென்று விடவேண்டும் என்று எண்ணிய நிலையில் ஜூன் மாதம் இருவரும் பிரிந்து விட முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். 

மேலும் உஜ்வாலா “அபூர்வாவிற்கு திருமணத்திற்கு முன்பே மற்றொரு ஆணுடன் தொடர்பில் இருந்ததாகவும் மிகவும் பணத்து ஆசை உள்ளவள் என்றும் சொத்தின் மீது மிகவும் ஆர்வம் காட்டியதாகவும்” கூறினார்.

Advertisement

தடயவியல் அறிக்கை மற்றும் தகவலின் அடிப்படையில் அபூர்வா கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டார். இறுதியில் நான் தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார் என்று காவல்துறை துணை ஆணையர்  ராஜீவ் ரஞ்சன் கூறினார்.

Advertisement