Read in English
This Article is From Aug 03, 2018

நிறுவன மதிப்பு: வரலாற்றுச் சாதனை படைத்துள்ள ஆப்பிள் நிறுவனம்..!

ஆப்பிள் நிறுவனம் நேற்று ஒரு வரலாற்றுச் சாதனையை புரிந்துள்ளது

Advertisement
உலகம் (c) 2018 The Washington Post

ஆப்பிள் நிறுவனம் நேற்று ஒரு வரலாற்றுச் சாதனையை புரிந்துள்ளது. அதன் மொத்த மதிப்பு நேற்று 1 டிரில்லியன் டாலர்களை தொட்டது. இதுவரை எந்த நிறுவனமும் அவ்வளவு பெரிய மதிப்பைப் பெற்றிருக்காத நிலையில், முதன் முறையாக அதை கடந்துள்ளது அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஆப்பிள் நிறுவனம்.

இது குறித்து மேரிலாண்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டேவிட் காஸ், ‘ஆப்பிள் நிறுவனம் 1 டிரில்லியன் டாலர் மதிப்பை பெற்றுள்ளது என்பது 2018 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவிகிதத்திற்கு சமமாகும்’ என்று கூறியுள்ளார்.

பங்கு சந்தையில் 1 டிரில்லியன் டாலர் மதிப்பைக் கடந்துள்ள ஆப்பிளின் மதிப்பு, நேற்று ஒரே நாளில் 2.92 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஷேர் விலை 207.39 டாலர்களாக இருந்தது. இதன் மூலம் ஆப்பளின் சந்தை மதிப்பு, 1,001,678,000,000 டாலர், அல்லது 1.002 டாலர்களாக உயர்ந்துள்ளது.

Advertisement

இந்த ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி ஆப்பிள் நிறுவனம், அதற்கு 4,829,926,000 பங்குகள் இருந்ததாக தெரிவித்துள்ளது.

காஸ் இந்த விஷயம் குறித்து மேலும், ‘உலகில் எதை விடவும் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடு செய்வது தான் மிகப் பிரபலமாக இருந்து வருகிறது. தற்போது புதிய உச்சத்தை ஆப்பிள் தொட்டுள்ளதால் அதன் முதலீட்டாளர்களுக்கும் பெரும் லாபம் வரும்’ என்றுள்ளார்.

Advertisement

ஆப்பிளின் இந்த அசுர வளர்ச்சிக்குக் காரணம் ஐபோன் விற்பனைதான் என்று கூறப்படுபிறது. 

கடந்த 2007 ஆம் ஆண்டு, ஜூன் 29 ஆம் தேதி ஆப்பிள் நிறுவனம், ஐபோனை சந்தையில் அறிமுகம் செய்தது. அப்போதிலிருந்து ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பு ஏறுமுகத்தை மட்டுமே பார்த்து வருகிறது. 2007 ஆம் ஆண்டிலேயே வெறும் 72 பில்லியன் டாலர்களாக இருந்த அப்பிள் நிறுவனத்தின் மதிப்பு, 173 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. 2010 ஆம் ஆண்டில் அதன் மதிப்பு, 300 பில்லியன் டாலர்களாக ஆனது. 2012-ல் 500 பில்லியன் டாலர்களைத் தொட்டது. 2016 ஆம் ஆண்டில், அது 600 பில்லியன்களாக ஆனது. தற்போது 1 டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட நிறுவனமாக ஆப்பிள் உறுவெடுத்துள்ளது.

Advertisement