This Article is From May 22, 2019

எல்லைப் பிரச்னை தொடர்பாக இந்தியா - சீனா முக்கிய பேச்சுவார்த்தை

இந்தியா - சீனா இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. இதில் சீனா அவ்வப்போது அத்துமீறுவதும் பின்னர் இந்தியாவின் நடவடிக்கையை தொடர்ந்து பின்வாங்குவதும் வழக்கமாக உள்ளது.

எல்லைப் பிரச்னை தொடர்பாக இந்தியா - சீனா முக்கிய பேச்சுவார்த்தை

ஜம்மு காஷ்மீரின் கிழக்கு லடாக் பகுதியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Srinagar:

எல்லைப் பிரச்னை தொடர்பாக இந்தியா - சீனாவின் ராணுவ உயர் அதிகாரிகள் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீரின் கிழக்கு லடாக் பகுதியில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 

மேஜர் ஜெனரல் அரவிந்த் கபூர் தலைமையிலான இந்திய ராணுவ அதிகாரிகள் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சீனா தரப்பில் சீனிரியர் கர்ணல் கான் வெ ஹான் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்றனர். 

இந்த பேச்சுவார்த்தையின்போது இரு தரப்பிலும் எல்லையில் அமைதியை நிலை நிறுத்துவது, இரு நாட்டு உறவை பலப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டது. 

இந்தியா - சீனா இடையே சுமார் 3500 கிலோ மீட்டர் நீளத்திற்கு நில எல்லை அமைந்துள்ளது. சமீபத்தில் டோக்லாம் பகுதியில் இந்தியா - சீனா இடையே மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது. இதில் மத்திய அரசின் முயற்சியால், ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட சீன ராணுவம் பின் வாங்கிச் சென்றது. 

.