பாகிஸ்தான் - சீனா உறவு குறித்து ராணுவ தளபதி எம்.எம். நராவனே கருத்து தெரிவித்துள்ளார்.
New Delhi: பாகிஸ்தானை எப்போதும், எந்த நேரத்திலும் ஆதரித்துக் கொண்டே இருக்க முடியாது என்பதைச் சீனா உணர்ந்திருப்பதாக ராணுவ தளபதி எம்.எம். நராவனே கூறியுள்ளார்.
தற்போது FATF - ன் சாம்பல் நிற பட்டியலில் (Grey List)-ல் பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது. தீவிரவாதத்திற்கு எதிராக அந்நாடு நடவடிக்கை எடுக்காமலிருந்து வருவதைக் காரணம் காட்டி, கருப்பு பட்டியலில் FATF சேர்க்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிர்ஷ்ட வசமாக அந்நாடு சாம்பல் நிற பட்டியலில் நீடிக்கிறது.
முன்னதாக பொருளாதார கட்டுப்பாடுகளை விதிக்கும் சாம்பல் பட்டியலிலிருந்து பாகிஸ்தான் கடந்த ஏப்ரலில் நீக்கப்பட்டது.
இதன்பின்னர் கடந்த அக்டோபர் மாத்தின்போது, லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது அமைப்புகளுக்குப் பாகிஸ்தான் உதவி செய்ததைச் சுட்டிக்காட்டி அந்நாட்டை மீண்டும் சாம்பல் பட்டியலில் FATF கொண்டு வந்தது.
கடந்த ஏப்ரலில் சாம்பல் பட்டியலிலிருந்து பாகிஸ்தான் நீக்கப்படாமல் இருந்தால், அந்நாடு தற்போது கருப்பு பட்டியலில் இடம்பெற்று, கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும்.
பாகிஸ்தான் இன்னும் கொஞ்சம் அத்துமீறினால், FATFன் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த விவகாரம் குறித்து ராணுவ தளபதி எம்.எம். நரவானே அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
பாகிஸ்தானுக்கு எப்போதும், எந்த நேரத்திலும் ஆதரவு அளித்துக் கொண்டிருக்க முடியாது என்பதைச் சீனா உணர்ந்துள்ளது. FATF பாகிஸ்தானுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இதனால், தீவிரவாதத்திற்கு உதவும் போக்கை மாற்றிக்கொள்ளப் பாகிஸ்தான் பரிசீலனை செய்வதற்கு வாய்ப்புள்ளது.
இவ்வாறு ராணுவ தளபதி தெரிவித்தார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)