This Article is From Oct 25, 2019

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்!

வடக்கு ராணுவ பிரிவு தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ரன்பீர் சிங் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்!

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டர் அவசரமாக தரையிரக்கம் (Representational photo)

Srinagar:

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இன்று இந்திய விமானப் படைக்கு சொந்தமான நவீன இலகு ரக ஹெலிகாப்டரில்  விமானப்படை அதிகாரிகள் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர்.

இதில், வடக்கு ராணுவ பிரிவு தளபதி, இரு விமானிகள் உள்பட 7 பேர் அந்த ஹெலிகாப்டரில் சென்றனர். 

அப்போது ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனை உணர்ந்த விமானிகள் ஹெலிகாப்டரை உடனடியாக தரையிறக்கினர். இதில், ஹெலிகாப்டரில் பயணித்தவர்கள் பத்திரமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதுதொடர்பாக வடக்கு ராணுவப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு ராணுவ பிரிவு தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ரன்பீர் சிங் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் அவசரமாக தரையிரக்கப்பட்டது. அதில் பயணித்த அனைவரும் பத்திரமாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

With inputs from ANI
 

.