This Article is From Aug 16, 2019

பெண் கேப்டனுக்கு பாலியல் தொல்லை தந்த ராணுவ மேஜர் டிஸ்மிஸ்! பென்ஷனும் நிறுத்தி வைப்பு!!!

பாலியல் குற்றச்சாட்டின்பேரில் ராணுவ அதிகாரி ஒருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டதுடன், பென்ஷனும் வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது ராணுவ வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெண் கேப்டனுக்கு பாலியல் தொல்லை தந்த ராணுவ மேஜர் டிஸ்மிஸ்! பென்ஷனும் நிறுத்தி வைப்பு!!!

டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ள அதிகாரி தன் மீதான புகார்களை மறுத்திருக்கிறார்.

New Delhi:

இந்திய ராணுவத்தில் பெண் கேப்டன் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ மேஜர் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பென்ஷனும் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2016-ல் இந்த சம்பவம் நடந்துள்ளது. ராணுவத்தின் மேற்கு பகுதியில் மேஜர் எம்.ஜே.எஸ். காலோன் பணி செய்து கொண்டிருந்தபோது பெண் கேப்டனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். 

இதுதொடர்பாக கேப்டன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை ராணுவ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் மேஜர் குற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை டிஸ்மிஸ் செய்து தலைமை தளபதி பிபின் ராவத் நடவடிக்கை எடுத்துள்ளார். 

டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராணுவ அதிகாரிக்கு ஓய்வூதியமும் வழங்கப்பட மாட்டாது என்று ராணுவம் அறிவித்திருக்கிறது. மேஜர் கலோன் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவர். அவர் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவில் மேஜராக பொறுப்பு வகித்து வந்தார். 

பாலியல் குற்றச்சாட்டின்பேரில் ராணுவ அதிகாரி ஒருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டதுடன், பென்ஷனும் வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது ராணுவ வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

With inputs from ANI

.