Jaipur: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, ஆகஸ்டு 19 தேதி கேரளாவிற்கு வந்த இராணுவ வீரர் ஹேமந்த் ராஜ், நூற்றுக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்றி மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார்
கடந்த ஆகஸ்டு மாதம் 8 ஆம் தேதி முதல், கேரளாவில் கனமழை பெய்து வந்தது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இராணுவ அதிகரியாக பணியாற்றி வரும் கேரளாவைச் சேர்ந்த ஹேமந்த் ராஜ் என்பவர், ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா செல்ல திட்டமிட்டுள்ளார். ஆனால், கனமழை காரணமாக கொச்சிக்கு வர இருந்த விமாண சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கேரள நிவாரண பணிகளுக்காக திருவணந்தபுரம் செல்ல இருந்த இண்டிகோ விமான சேவையின் உதவியோடு, ஹேமந்த் கேரளா விரைந்துள்ளார். வெள்ளத்தின் சீற்றத்தை கண்ட ஹேமந்த, உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட தொடங்கினார்
வெள்ள பாதிப்பால் ஹேமந்த்தின் குடும்பதினரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பதை அவர் அறிந்து கொண்டார். கேரளாவின் நிலையை உணர்ந்த ஹேமந்த், ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள், மாணவர்கள், மீனவர்களின் உதவியோடு மீட்பு பணியில் ஈடுபட தொடங்கினார்
ஹேமந்தின் சேவையை கண்டு சமூக வலைத்தளத்தில் அவரது புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. பின்னர், சமூக வலைத்தளத்தின் உதவியுடன் ஹேமந்தின் குடும்பத்தார் அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வந்த இராணுவ வீரர் ஹேமந்தின் குழுவினர், நூற்றுக்கும் மேற்பட்ட மக்களின் உயிரை காப்பாற்றியுள்ளனர். விடுமுறையின் முதல் நாளில் இருந்து கேரள வெள்ளத்தில் நிவாரண பணியில் ஈடுபட்டு வரும் ஹேமந்த், விரைவில் அவரது குடும்பத்தினரை சந்திப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது