This Article is From Jun 16, 2020

லடாக்கில் தாக்குதல்! ஒரு ராணுவ அதிகாரி உட்பட மூன்று பேர் உயிரிழப்பு!!

இந்தியா சீனா எல்லைப் பிரச்னை தொடர்பாக சமீபத்தில் இரு நாட்டின் ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அதில் இரு நாட்டின் ராணுவ படைகளும் சர்ச்சைக்குரிய பகுதியிலிருந்து விலக்கிக்கொள்வதாக முடிவு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

லடாக்கில் தாக்குதல்! ஒரு ராணுவ அதிகாரி உட்பட மூன்று பேர் உயிரிழப்பு!!

கடந்த சில வாரங்களாக இந்தியா, சீனா இடையே பிரச்னை இருந்து வந்தது

ஹைலைட்ஸ்

  • லடாக்கில் ஒரு ராணுவ அதிகாரி மற்றும் 2 ராணுவ வீரர்கள் மரணம்
  • சீன இராணுவ வீரர்கள் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர்
  • இரு தரப்பினரும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்துள்ளனர்

இந்தியா சீனா எல்லைப் பிரச்னை தொடர்பாக சமீபத்தில் இரு நாட்டின் ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அதில் இரு நாட்டின் ராணுவ படைகளும் சர்ச்சைக்குரிய பகுதியிலிருந்து விலக்கிக் கொள்வதாக முடிவு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

  • இந்நிலையில் நேற்று இரவு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் நடந்த தாக்குதலில் ஒரு ராணுவ அதிகாரி மற்றும் இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் நிலைமையை கண்காணிக்க இரு தரப்பினரும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவித்துள்ளன.
  • நேற்று இரவு நடந்த இரு தரப்பினருக்கும் இடையேயான மோதலில் சீன தரப்பிலிருந்து ஐந்து ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 11 பேர் காயமடைந்திருப்பதாகவும், தி குளோபல் டைம்ஸின் மூத்த நிருபர் ட்வீட் செய்துள்ளார்

  • லடாக்கின் கிழக்கு பகுதியான  பாங்கோங் த்சோ, கால்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக் மற்றும் தவுலத் பேக் ஓல்டி போன்ற இடங்களில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் சமீபத்தில் மோதல் போக்கை கடைபிடித்து வந்தனர்.
  • சீன இராணுவ வீரர்கள், எல்லை கட்டுப்பாட்டை மீறி, இந்தியப் பகுதி மற்றும் பாங்கோங் த்சோ உள்ளிட்ட பல பகுதிகளிலும் அத்துமீறி நுழைந்தனர். இந்நிலையில் இரு நாட்டின் ராணுவ உயர் அதிகாரிகளின் பேச்சு வார்த்தைக்குப் பின்னர் சீன ராணுவம் கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கு, பிபி -15 மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் ஆகியவற்றிலிருந்து தனது படைகளைத் திரும்பப் பெற்றது. இந்தியத் தரப்பும், தனது சில துருப்புக்களையும் வாகனங்களையும் இந்த பகுதிகளிலிருந்து திரும்ப பெற்றது.
  • எல்லையில் நடந்த மோதலில் துப்பாக்கிசூடு ஏதம் நடைபெறவில்லை என்றும், கைகளால் தாக்கப்பட்டதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இரு தரப்பு மேஜர் ஜெனரல்களும் தற்போது சந்தித்து வருவதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 1962-ல் இந்தியா சீனா எல்லை போர் நடந்தது. அதன் பின்னர் 1975-க்கு பிறகு இந்தியா சீனா எல்லையில் நடந்த முதல் வன்முறை உயிரிழப்பு சம்பவம் இதுவாகும்.
  • சீன தரப்பிலிருந்து, “இந்திய ராணுவம் சீன எல்லையை கடந்து, சீன ராணுவத்தினரை தாக்கியது.“ என ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தியா ஒரு தலைபட்சமான முடிவுகளையோ, பதற்றத்தை அதிகரிக்கக்கூடிய வகையிலோ எந்த முடிவையும் மேற்கொள்ள வேண்டாம் என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம்  ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.
  • இந்நிலையில் தற்போது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பாதுகாப்புப் படைத் தலைவர் (சி.டி.எஸ்) ஜெனரல் பிபின் ராவத், முப்படைத் தலைவர்கள் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருடன் ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.
  • முன்னர் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தை மீறி இந்திய ராணுவத்தை சேர்ந்த இரண்டு ராணுவ வீரர்கள் இருமுறை சீனாவின் எல்லைக்குள் ஊடுருவியுள்ளனர். இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சீனாவின் குளோபல் டைம்ஸ் மேற்கோள் காட்டியுள்ளது. எல்லை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய ராணுவத்தினர் சீன தரப்பினரை தாக்கலுக்கு தூண்டினார்கள் என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.
  • பல ஆண்டுகளுக்கு பின்னர் மத்திய அரசு லடாக் எல்லை பகுதியில் 2022 க்குள், சீன எல்லையில் 66 முக்கிய சாலைகள் கட்டப்படும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இந்த சாலைகளில் ஒன்று கால்வான் பள்ளத்தாக்குக்கு அருகில் உள்ளது இது கடந்த அக்டோபரில் திறந்து வைக்கப்பட்ட தவுலத் பேக் ஓல்டி விமான தளத்தை இணைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

.