குண்டுவெடிப்பில் தனது பார்வையை இழந்தார் மேஜர் மித்ரா
முதல் முறையாக இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஒருவர், யூனிசெப் அமைப்பின் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அப்படி நியமிக்கப்பட்டவர் மேஜர் மித்ரா ஆவார். இதனை இந்திய இராணுவம் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.
‘மேஜர் மித்ரா ஐஇடி குண்டுவெடிப்பில் தனது பார்வையை இழந்தார். அதையும் தாண்டி, சமூக சேவையில் தனது முதுகலை படிப்பை அவர் முடித்தார். அதன் பின்னர் லண்டனில் எம்.எஸ்சி படித்தார்' என அந்த சமூக வலைதள பதிவில் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பதிவு , இதுவரை 25,000 லைக்ஸ் மற்றும் ஏராளமான கமென்ட்ஸ்களைப் பெற்றுள்ளன.
‘உலகம் முழுவதும் சுமார் 180 முதல் 220 மில்லியன் இளைஞர்கள் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர். இதில் பாதி பேர், முன்னேறிய நாடுகளில் வசிக்கின்றனர். அதனால் அரசுகள், தங்களின் திட்டங்களின் மாற்றுத் திறனாளிகளை கருத்தில் கொள்ளவில்லை என்றால் அது மனித உரிமை மீறலுக்கு உட்பட்டதாகும்' என மேஜர் மித்ரா 2012 ஆம் ஆண்டு பேட்டி அளித்திருந்தார்.
Click for more
trending news