Read in English
This Article is From Oct 18, 2018

தேர்வு மையங்களை சுற்றி, இணைய சேவையை துண்டிக்க ராஜஸ்தான் அரசு முடிவு!

தேர்வு மையங்களில் மெசேஜ் ஆப்களை தடை செய்வது குறித்து போலீசாரிடம் பரிந்துரை செய்தோம். அவர்கள் செல்போன்களுக்கு இணைய வசதி வழங்கும் நிறுவனத்தினரிடம் தொடர்பு கொண்டு ஆலோசிப்பார்கள் என்றார்

Advertisement
நகரங்கள்

ராஜஸ்தான் அரசாங்கம் சோஷியல் மெசேஜிங் ஆப்களை தடை செய்ய திட்டமிட்டுள்ளது.

Jaipur:

மோசடிகளை தடுக்க, தேர்வு மையங்களை சுற்றி வாட்ஸ் ஆப் போன்ற மெசேஜ் ஆப்களை தடை செய்ய ராஜஸ்தான் அரசு ஆலோசித்து வருதுகிறது.

இது குறித்து, தொழிநுட்ப மற்றும் தொடர்பு துறை முதன்மை செயலாளர் அகில் அரோரா கூறுகையில், காவல்துறை அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனையில் நாங்கள் இதனை பரிந்துறை செய்துள்ளோம். அவர்கள் `செல்போன்களுக்கு இணைய வசதி வழங்கும்
நிறுவனத்தினரிடம் தொடர்பு கொண்டு ஆலோசிப்பார்கள் என்றார்.

நாங்கள் அவர்களுக்கு தேவைப்பட்டால் மாற்று ஏற்பாடு செய்து தரவும் முடிவு செய்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்வர்கள், மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போட்டித்தேர்வுகளின் போது செல்போன் இணைய சேவை துண்டிக்கப்படும். தேர்வுகளின் முக்கியத்தை பொருத்து மொத்த மாநிலமும் இணைய சேவை பெறுவதில் சில பாதிப்புகள் ஏற்படலாம்.

Advertisement

பல அதிகாரிகள் பொதுமக்களுக்கு இது தேவையில்லாத தொந்தரவை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் இணைய சேவையே முடக்க தேவையில்லை என்றும் மெசேஜிங் ஆப்புகள் சேவையை மட்டும் துண்டித்தால் போதுமானது என தெரிவித்துள்ளனர்.

Advertisement