This Article is From May 21, 2020

போலி மருத்துவர் திருத்தணிகாசலம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! போலீசார் நடவடிக்கை

வழக்கில் தனக்கு ஜாமீன் கேட்டு திருத்தணிகாசலம் தொடர்ந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போது இருக்கும் பதற்றமான சூழலை லாபம் ஈட்டும் நோக்கத்துடன் பயன்படுத்துவதால் ஜாமீன் அளிக்கக்கூடாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜாமீன் ரத்தானது. 

போலி மருத்துவர் திருத்தணிகாசலம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! போலீசார் நடவடிக்கை

திருத்தணிகாசலம் கடந்த 6-ம்தேதி கைது செய்யப்பட்டிருந்தார்.

ஹைலைட்ஸ்

  • சுகாதாரத்துறை புகாரின்பேரில் கடந்த 6-ம்தேதி திருத்தணிகாசலம் கைதானார்
  • பல்வேறு தரப்பினர் திருத்தணிகாசலம் மீது புகார் அளித்துள்ளனர்
  • குண்டர் சட்டத்தின் கீழ் திருத்தணிகாசம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்திய போலி மருத்துவர் திருத்தணிகாச்சலம் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் சென்னை மாநகர போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. திருத்தணிகாச்சலம் மீது தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

சென்னையைச் சேர்ந்த போலி மருத்துவர் திருத்தணிகாச்சலம் என்பவர், கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக சமூக வலைதளங்களில் கூறி வந்தார்.

அவரது கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. கோவிட் - 19 எனும் கொரோனா வைரஸ் குறித்து வாட்ஸ்-அப், முகநூல் போன்ற எலக்ட்ரானிக் மீடியாவில், பொது சுகாதாரத் துறை இயக்குநர் அல்லது மருத்துவக் கல்வி இயக்குநர் அல்லது ஊரக மருத்துவம், சுகாதாரப் பணிகள் இயக்குநர் அல்லது மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதியின்றி தகவல் பரப்புதல் The Epidemic Diseases Act and Regulations பிரிவு 8-ன்படி தடை செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சர்ச்சையை ஏற்படுத்திய திருத்தணிகாச்சலத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுகாரத்துறை சார்பாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 6-ம்தேதி  கைது செய்யப்பட்டார். 

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கேட்டு திருத்தணிகாசலம் தொடர்ந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போது இருக்கும் பதற்றமான சூழலை லாபம் ஈட்டும் நோக்கத்துடன் பயன்படுத்துவதால் ஜாமீன் அளிக்கக்கூடாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜாமீன் ரத்தானது. 

இந்த நிலையில், திருத்தணிகாசலத்தின் மீது மோசடி புகார்கள் அதிக எண்ணிக்கையில் வந்து கொண்டிருந்தன. இதன் அடிப்படையில் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். 

.