Read in English
This Article is From Aug 10, 2020

டெல்லி அருகே பிரபல ஏடிஎம் கொள்ளை கும்பலின் தலைவன் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு!

நேற்றைய தினம், அந்த கொள்ளை கும்பல் தெற்கு டெல்லி சுற்றுப்புறத்தில் உள்ள ஏடிஎம் ஒன்றில் கொள்ளையடிக்க உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

Advertisement
இந்தியா ,

டெல்லி அருகே பிரபல ஏடிஎம் கொள்ளை கும்பலின் தலைவன் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு!

New Delhi:

டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் ஏடிஎம்களை கொள்ளையடிப்பதன் மூலம் தங்களுக்கென ஒரு பெயரை உருவாக்கிய கொள்ளை கும்பல் ஒன்றின் மீது நேற்று மாலை தலைநகரின் வசந்த் குஞ்ச் பகுதி அருகே துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார் அந்த கும்பலின் 27 வயது தலைவனை கைது செய்ததாக தெரிவித்துள்ளனர். 

ராஜஸ்தானில் ஆல்வாரில் வசிக்கும் அர்ஷத் கான், ஏடிஎம் திருட்டுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார். கொள்ளையர்கள் இயந்திரங்களை உடைத்து நள்ளிரவில் திருடிவிட்டு தப்பி ஓடுவதை வாடிக்கையாக வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்றைய தினம், அந்த கொள்ளை கும்பல் தெற்கு டெல்லி சுற்றுப்புறத்தில் உள்ள ஏடிஎம் ஒன்றில் கொள்ளையடிக்க உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

Advertisement

இதையடுத்து, மாலை 6:30 மணியளவில், போலீஸ் குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டனர். இரவு 7:30 மணியளவில் கொள்ளையர்கள் டொயோட்டா செடான் காரில் அந்த பகுதிக்கு வந்துள்ளனர். இதையடுத்து, போலீசார் அவர்களை சுற்றிவளைத்து சரணடையுமாறு கேட்டுக் கொண்டனர்.

ஏடிஎம் அருகே அர்ஷத் கானை போலீசார் மடக்கி பிடித்தனர்.

எனினும், அர்ஷத் கான் தனது துப்பாக்கியைத் தட்டிவிட்டு போலீஸ் குழுவினரை நோக்கி நான்கு சுற்றுகள் சுட்டுள்ளார்" என்று காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, போலீஸ் குழுவும் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது, அதில் அவர் ஒரு தோட்டா அர்ஷத் கானின் காலில் பாய்ந்துள்ளது. இதன் பின்னர் அவர் போலீஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டதாக" அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

காயமடைந்த அர்ஷத் உடனடியாக சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement