காஷ்மீரில் உள்ள தனது பழைய வீட்டிற்கு செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக பாடகி ஆபா ஹஞ்சுரா தெரிவித்துள்ளார்.
Bengaluru: ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறந்த அந்தஸ்தான சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தும், காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்து அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு 1990களில் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட பாடகி ஆபா ஹஞ்சுரா மீண்டும் தனது வீட்டிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆபா ஹஞ்சுரா என்டிடிவி-க்கு அளித்த பேட்டியில், நம்பிக்கையின் பாதையில் செல்ல நான் முடிவு செய்துள்ளேன். இது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பிரகாசமான, சிறந்த விஷயங்களைக் கொண்டு வரும் என்று நான் நம்பிக்கையுடன் இருக்க விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழக்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வதாக அரசு அறிவித்ததுமே தனது டிவிட்டர் பதிவில் மகிழ்ச்சி தெரிவித்தார் ஆபா, நாங்கள் எங்கள் வீடுகளுடன் மீண்டும் ஒன்றிணைவோம். அதற்கான பாதை தெளிவாக இருக்கட்டும், இதுவே காஷ்மீரை வீட்டு விலகிச் சென்ற ஒவ்வொருவரின் கனவாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது பெங்களூரில் வசித்து வரும் பாடகி ஆபா கூறும்போது, அஞ்சல் துறையில் பணியாற்றிய எனது தந்தை, அவரது அனைத்து சேமிப்பின் மூலம் காஷ்மீரில் அந்த வீட்டை கட்டினார்.
ஆனால், காஷ்மீரில் இருந்து அப்போது வெளியேறினோம், அதுவே, தாய் மொழியில் என்னை பாட வைத்தது. எனக்கு, மீண்டும், அந்த வீட்டிற்கு மீண்டும் செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று மகிழ்ச்சிய தெரிவித்துள்ளார்.
சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்து தனது டிவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, ஜம்மு-காஷ்மீரை ஒருதலைப்பட்சமாக பிரித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை சிறையில் அடைத்து, நமது அரசியலமைப்பை மீறுவதன் மூலம் தேசியம் வளாராது.
இந்த நாடு, அதன் மக்களால் உருவாக்கப்பட்டது. நிலங்களால் அல்ல. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது நமது தேசிய பாதுகாப்பிற்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ராகுல் தெரிவித்துள்ளார்.