This Article is From Nov 14, 2018

டெல்லியில் காற்று மாசுபாட்டை அறிய செயற்கை நுரையீரல்: அதிர்ச்சியூட்டும் முடிவுகள்

உலகத்திலேயே மிகவும் மாசுபட்ட நகரமாகி பரிதவிக்கும் டெல்லியில், பனிக்காலம் தொடங்கியதிலிருந்து அங்கு நச்சுத்தன்மை வாய்ந்த சாம்பல் நிறத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது

டெல்லியில் காற்று மாசுபாட்டை அறிய செயற்கை நுரையீரல்: அதிர்ச்சியூட்டும் முடிவுகள்

ஹைலைட்ஸ்

  • “இதுபோல மாசுபட்ட காற்றையே நாமும் நமது நுரையீரலில் சுவாசிக்கிறோம்” என டாக்
  • கடந்த செவ்வாயன்று (பி.எம்) 2.5 ஆக இருந்த காற்று மாசு இப்போது பத்து மடங்கு
  • டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் கணக்கு படி காற்று மாசு சுமார் 369
New Delhi:

டெல்லியில் செயற்கையாக செய்யப்பட்ட நுரையீரல் ஒன்றை அங்குள்ள மருத்துவமனை முன் வைக்கப்பட்டது. இந்த நுரையீரல் மக்கள் அங்கு சுவாசிக்கும் காற்று எவ்வளவு மாசுபாடு உள்ளது என கண்டறிவதற்காக பொருத்தப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் செயற்கை நுரையீரல் பொருத்தப்பட்டு 10 நாட்களே ஆகிய நிலையில் அது நகரத்தின் மாசுபாட்டை முன்னிலைப்படுத்துவது போல் கடுமையான பிரவுன் நிறத்திற்கு மாறியுள்ளது.

உலகத்திலேயே மிகவும் மாசுபட்ட நகரமாகி பரிதவிக்கும் டெல்லியில், பனிக்காலம் தொடங்கியதிலிருந்து அங்கு நச்சுத்தன்மை வாய்ந்த சாம்பல் நிறத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இது உலக சுகாதார அமைப்பு வைத்திருந்த பாதுகாப்பு வரம்பையும் மீறியுள்ளது.

இம்மாதம் 3-ம் தேதி சார் கங்கா ராம் மருத்துவவமனையின் முன்
வைக்கப்பட்ட இந்த நுரையீரல், அங்கு வைக்கும்போது வெள்ளையாக இருந்தது. அதிநவீன முறையில் காற்றில் இருக்கும் துகள்களை நமது நுரையீரல் எப்படி சுவாசிக்குமோ அதைப்போலவே இதுவும் செயல்படும்.

952r9ink

“ கருப்பாக மாறியுள்ள இந்த நுரையீரலைக் காணும் பொழுது பயமாகத்தான் உள்ளது” என காற்று மாசுபாட்டை குறைக்க வேண்டி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் நுரையீரல்‌‌ அறுவை சிகிட்ச்சை மருத்துவரான அரவிந்த் குமார் கூறினார்.

குளிர்ந்த காற்று மாசுபட்ட துகள்களை எளிதாக ஈர்ப்பதால் காற்று மாசுவின் அளவு சிறு துகள்கள் எனப்படும் பார்டிக்குலேட் மீட்டரில் (PM) 2.5 PM நுனித்துகள்களால் ஆபத்தான அளவில் மக்களால் சுவாசிக்கப்படுகிறது.

.