Read in English
This Article is From Apr 04, 2019

ஜெ., மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடையில்லை! உயர்நீதிமன்றம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக அப்போலோ மருத்துவர்களிடம் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
தமிழ்நாடு Written by

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் ஆஜராக சம்மன் அனுப்பியது. ஆனால், ஆணையத்தில் மருத்துவர்கள் விசாரணைக்கு ஆஜராக மாட்டார்கள் என்று அப்போலோ நிர்வாகம் கூறியது.

இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எதிராக அப்போலோ நிர்வாகம் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. அதில், தங்கள் மருத்துவர்களை விசாரிக்க, நிபுணத்துவம் கொண்ட, தமிழக அரசு சாராத மருத்துவர்களைக் கொண்ட சுதந்திரமான குழுவை நியமிக்க உத்தரவிடவும், அதுவரை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க தடை விதிக்கவும் கோரியிருந்தது.

கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழக பொதுத்துறை, ஆறுமுகசாமி ஆணையம் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர்.

Advertisement

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடையில்லை என உத்தரவிட்டது.

மேலும், தங்கள் மருத்துவர்களை விசாரிக்க, நிபுணத்துவம் கொண்ட, தமிழக அரசு சாராத மருத்துவர்களைக் கொண்ட சுதந்திரமான குழுவை நியமிக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்தது.

Advertisement


 

Advertisement