This Article is From Mar 26, 2019

அருணாசல பிரதேசத்தை இந்தியாவின் பகுதியாக காட்டிய 30 ஆயிரம் மேப்புகளை அழித்த சீனா!!

அருணாசல பிரதேச விவகாரத்தில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. அந்த பகுதியை சீனா தனக்கு சொந்தமானது என்று கூறியுள்ளது.

அருணாசல பிரதேசத்தை இந்தியாவின் பகுதியாக காட்டிய 30 ஆயிரம் மேப்புகளை அழித்த சீனா!!

அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்று மத்திய அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.

Beijing:

அருணசல பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதி என்று காட்டும் சுமார் 30 ஆயிரம் உலக வரைபடங்களை சீன அரசு அழித்துள்ளது. 

இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அருணாசல பிரதேசம் அமைந்துள்ளது. இதனை சீனா தெற்கு திபெத் என்று கூறி, அது தனக்கு சொந்தமானது என்று உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கு மத்திய அரசு பலமுறை கண்டனம் தெரிவித்து விட்டதோடு, அருணாசல பிரதேசம் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என திட்டவட்டமாக கூறியள்ளது. 

இந்த நிலையில் 30 ஆயிரம் மேப்புகளை சீனா அழித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தைவான் நாடும் தனக்கு சொந்தம் என சீனா கூறி வருகிறது. 

கடந்த 1959-ல் ராணுவ நடவடிக்கை மூலமாக திபெத்தை சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இதேபோன்று தைவானையும் சீனா மிரட்டி வருகிறது. 

.