This Article is From Dec 27, 2019

தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கு ‘புன்னகையுடன் ஒத்துழையாமையை’ செய்யுங்கள் - அருந்ததி ராய்

எதிர்க்கட்சிகள், ஆர்வலர்கள் மற்றும் சில அமைப்புகள் கூட இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு பாகுபாடு காட்டுவதாகவும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மை மற்றும் சமத்துவத்தின் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது என்றும் கூறுகின்றனர்.

நான் சொன்னது புன்னகையுடன் கூடிய ஒத்துழையாமைதான் - அருந்ததி ராய்

New Delhi:

டெல்லி பல்கலைக்கழகத்தில்  தேசிய மக்கள் தொகை பதிவு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவு குறித்து உரையாற்றினார். அப்போது தான் பேசியதை தவறாக சித்தரித்துள்ளதாக கண்டித்துள்ளார். டெல்லி பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதை எதிர்த்து பேசியதாக சில அரசியல்வாதிகள் அவரை கைது செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். 

என்.ஆர்.சி மற்றும் தடுப்பு காவல் முகாம் இல்லை என்று பிரதமர் கூறியதை பொய் என்று அருந்ததி ராய் பேசினார்.

“பிரதம மோடி பேசிய பொய்களுக்கு விடையிறுக்கும் விதமாக என்.பி.ஆருக்கான தனிப்பட்ட தரவுகளை சேகரிக்க வந்தால் பொய்யான தகவல்களையே கூறுங்கள் என்று நான் சொன்னேன். நான் சொன்னது புன்னகையுடன் கூடிய ஒத்துழையாமைதான்” என்று தெரிவித்தார்.

வியாழக்கிழமை  பல தொலைக்காட்சி சேனல்களில் காட்டப்பட்ட கருத்துகளில் அருந்ததி ராய், என்.பி.ஆர், என்.ஆர்.சிக்கு தரவுத்தளமாக செயல்படும் என்பதால் தவறான பெயர்களையும் முகவரியையும் கொடுத்து அதை எதிர்க்குமாறு மக்களை கேட்டுக் கொண்டார்.

என்னுடைய பேச்சினை அனைத்து தொலைக்காட்சிகளும் முழுமையாக பதிவு செய்தன. ஆனால் அவர்கள் எதையும் ஒளிபரப்பவில்லை. அதிர்ஷ்டவசமாக என்னுடைய முழு பேச்சும் யூ ட்யூப்பில் உள்ளது. 

எனது கேள்வி இதுதான் இந்த நாட்டின் பிரதமர் எங்களிடம் பொய் சொல்வது சரியா, ஆனால் ஒரு கிரிமினல் குற்றம்  மக்களின் பாதுகாப்பை அச்சுறுத்துவது சரியா…? அற்புதமான வெகுஜன ஊடகங்கள்” இந்த வார தொடக்கத்தில்  மத்திய அரசினால் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு அனுமதியளிக்கப்பட்டது. என். ஆர்.சிக்கு முன்னோடியாக இது கருதப்படுகிறது. இது சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காண்பதற்கான முறையாகும். நாடு முழுவதும் போராடும் மாணவர்கள், ஆர்வலர்கள், எதிர்க்கட்சிகள்யினர் அனைவரும் என்.ஆர்.சி என்பது முஸ்லிம்களை குறிவைக்கும் கருவிகளாக பயன்படுத்தப்படும் என்று அஞ்சுகின்றனர்.

குடியுரிமை (திருத்தம்) சட்டம் மதத்தை முதன்முறையாக குடியுரிமைக்கான அளவுகோலாக மாற்றுகிறது. மூன்று அண்டை நாடுகளில் மதத் துன்புறுத்தல்களில் இருந்து தப்பிக்கும் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் இந்திய குடிமக்களாக மாற இது உதவும் என்று அரசாங்கம் கூறுகிறது. 

எதிர்க்கட்சிகள், ஆர்வலர்கள் மற்றும் சில அமைப்புகள் கூட இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு பாகுபாடு காட்டுவதாகவும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மை மற்றும் சமத்துவத்தின் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது என்றும் கூறுகின்றனர்.

.