This Article is From Dec 26, 2019

நாங்கள் துப்பாக்கி தோட்டக்களை எதிர்கொள்ள பிறக்கவில்லை -அருந்ததி ராய்

மத்திய அரசு உங்கள் வீடுகளுக்கே வந்து உங்கள், பெயர் தொலைபேசி எண்ணைக் கேட்கும். ஆதார் மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் போன்ற ஆவணங்களைக் கேட்பார்கள். என்.பி.ஆர் என்.ஆர்.சியின் தரவுத்தளமாக மாறும்

நாங்கள் துப்பாக்கி தோட்டக்களை எதிர்கொள்ள பிறக்கவில்லை -அருந்ததி ராய்

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு உங்கள் வீட்டிற்குவந்தால் பெயரினை மாற்றிக் கொடுங்கள் (File)

New Delhi:

எழுத்தாளரும் சமூக செயல்பாட்டாளருமான அருந்ததி ராய் தேசிய மக்கள்தொகை பதிவு தேசிய குடிமக்களின் பதிவுக்கு தரவுத்தளமாக செயல்படும். மேலும் மக்கள் தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கு வரும் பொழுது தவறான பெயர்களையும் முகவரிகளையும் தருமாறு கேட்டுக் கொண்டார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களோடு இணைந்து பேசியபோது என்.ஆர்.சி முஸ்லிம் மக்களுக்கு எதிரானது என்று கூறினார்.

“மத்திய அரசு உங்கள் வீடுகளுக்கே வந்து உங்கள், பெயர் தொலைபேசி எண்ணைக் கேட்கும். ஆதார் மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் போன்ற ஆவணங்களைக் கேட்பார்கள். என்.பி.ஆர் என்.ஆர்.சியின் தரவுத்தளமாக மாறும்” என்று அருந்ததி ராய் கூறினார்.

“நாம் அதை எதிர்த்து போராட வேண்டும். ஒரு திட்டத்தை வைத்திருக்க வேண்டும். தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு உங்கள் வீட்டிற்குவந்தால் பெயரினை மாற்றிக் கொடுங்கள். தவறான முகவரியினைக்  கொடுங்கள். லத்தியடிகளுக்கும் தோட்டக்களுக்கும் நாங்கள் பிறக்கவில்லை” என்று எதிர்ப்பாளர்களிடம் சொல்லுங்கள்

டெல்லியில் நடந்த தனது பேரணியில் பிரதமர் மோடி பொய் சொன்னதாக குடியுரிமை சட்ட திருத்தம் செயல்படுத்துவது குறித்து அரசாங்கம் ஒருபோதும் எதுவும் கூறவில்லை என்றும் நாட்டில் தடுப்பு முகாம்கள் ஏதுமில்லை என்று அவர் கூறியிருந்தது முழுவதும் பொய் என்றார்.

உத்தர பிரதேசத்தில் முஸ்லிம்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். காவல்துறையினர் வீடுவீடாக சென்று கொள்ளையடிப்பதாக தெரிவித்தார்.

.