Indore: ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் புது டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோடியை, அவரின் சமீபத்திய கருத்து ஒன்றுக்கு விமர்ச்சித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் உள்ள அசாம்கர் பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் பேசிய பிரதமர் மோடி, ‘காங்கிரஸ், முஸ்லீம் மக்களின் கட்சியாக மட்டுமே இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் எரிர்கட்சிகள் முத்தலாக் சட்டத்தை ஏன் எதிக்கின்றன’ என்று பேசினார். இதற்கு எதிர்கட்சிகள் தரப்பிலிருந்து கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
குறிப்பாக கெஜ்ரிவால், ‘ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் கழித்தும் மோடி, இந்து - முஸ்லீம் குறித்து பேசிக் கொண்டிருந்தால், அவர் இந்த காலகட்டத்தில் எதுவுமே செய்யவில்லை என்று தான் அர்த்தம். இப்படி, இந்து - முஸ்லீம் குறித்து பேசுவதால் இந்தியா நம்பர் 1 நாடாக ஆகிவிடுமா? அமெரிக்கா நானோ தொழில்நுட்பம் குறித்து பேசிக் கொண்டிருக்கிறது. ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் மிகப் பெரும் தொழில்நுட்பங்கள் குறித்து கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றன. கல்வி தான் இந்தியாவை உலக அளவில் நம்பர் 1 நாடாக ஆக்கும். ஆனால், மத்தியில் கடந்த 70 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த எந்கக் கட்சியும் நாட்டின் கல்வியை தரம் உயர்த்த எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இந்தியர்கள்தான் உலகத்திலேயே மிகவும் அறிவார்ந்த மக்கள் கூட்டம். ஆனால், மிகக் கீழ்த்தரமான அரசியலுக்காக இந்தியர்களில் பெரும்பாலானோர் கல்வியறிவு அற்றவர்களாக வைக்கப்பட்டுள்ளனர்’ என்று அடுக்கடுக்காக குற்றம் சாட்டினார்.