This Article is From Oct 17, 2019

மொபைல் APP தொடங்கினார் டெல்லி முதல்வர் !! உண்மையை மட்டும் வெளியிடப்போவதாக கருத்து!

கட்சி தொண்டர்கள் மற்றும் மக்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பதற்காகவும், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இந்த ஆப்பை தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மொபைல் APP தொடங்கினார் டெல்லி முதல்வர் !! உண்மையை மட்டும் வெளியிடப்போவதாக கருத்து!

மொபைல் ஆப்-யை காட்டும் அரவிந்த் கெஜ்ரிவால்.

New Delhi:

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் AK APP என்ற பெயரில் மொபைல் ஆப்-யை தொடங்கியுள்ளார். இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 

மொபைல் ஆப் தொடங்கியது குறித்து கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில், 'ஆம் ஆத்மியைப் பற்றியும், டெல்லி அரசைப் பற்றியும் தவறான தகவல்கள் பரப்பப்படும்போது உண்மை செய்திகளை நாங்கள் இந்த மொபைல் ஆப் மூலமாக வெளியிடுவோம்' என்று கூறியுள்ளார். 
 

இந்தி மற்றும் ஆங்கில மொழியில் கெஜ்ரிவால் ஆப் தொடங்கப்பட்டுள்ளது. ப்ளே ஸ்டோரில் இந்த ஆப் இடம்பெற்றுள்ளது. Arvind Kejriwal என்று இந்த ஆப்-க்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

உறுதி செய்யப்பட்ட செய்திகள், கெஜ்ரிவால் பங்கேற்கும் கூட்டங்கள், லைவ் டிவி, டெல்லி அரசின் நிர்வாக அமைப்பு, வதந்தியும் உண்மையும் உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இதனை டவுன்லோட் செய்து கொள்ளுமாறு ஆம் ஆத்மி தொண்டர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். 
 

.


2015-ல் நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களில் வெற்றி பெற்றது. மீண்டும் அங்கு சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. 
 

.