This Article is From Feb 25, 2020

காவல்துறையினரால் செயல்பட முடியவில்லை. உத்தரவுக்காகக் காத்திருக்கின்றார்கள்- கெஜ்ரிவால்

இந்த மோதல் சம்பவத்தினையொட்டி வெளி மாநிலத்தவர்கள் தலைநகருக்குள் நுழைவதைத் தடுப்பதற்கும், கலவரப் பகுதியினை சீல் வைப்பதற்கும் முதல்வர் அழைப்பு விடுத்திருந்தார்.

Delhi violence: Delhi Chief Minister Arvind Kejriwal said he will meet Amit Shah

New Delhi:

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கெடுத்த போராட்டக்காரர்களும், ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் பங்கெடுத்த ஆதரவாளர்களும் மோதிக்கொண்டதன் விளைவாகத் திங்கட் கிழமை வடகிழக்கு டெல்லியில் கலவரம் வெடித்தது.

இதனைத்தொடர்ந்து கலவரத்தில் ஒரு காவலர் உட்பட ஏழு பேர் உயிரிழந்து இருப்பதாகத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இந்த மோதல் சம்பவத்தில் கிட்டதட்ட 100 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மோதல் சம்பவத்தினையொட்டி வெளி மாநிலத்தவர்கள் தலைநகருக்குள் நுழைவதைத் தடுப்பதற்கும், கலவரப் பகுதியினை சீல் வைப்பதற்கும் முதல்வர் அழைப்பு விடுத்திருந்தார்.

காவல்துறையினரால் தங்கள் உயர் அதிகாரிகளிடமிருந்து உத்தரவுகளை பெற முடியவில்லை என்றும், இவ்வாறு குறிப்பிட்ட உத்தரவு இல்லாமல் இருக்கும் பட்சத்தில் காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்துவதா அல்லது, தடியடியைப் பிரயோகிப்பதா என்பதில் சிக்கல் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், இது குறித்துத் தான் உள்துறை அமைச்சரான அமித்சாவிடம் பேச இருப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

தற்போதைய சூழல் நல்ல சூழல் அல்ல என்றும், கலவரத்தில் கொல்லப்பட்ட காவலர்  மற்றும் காயமடைந்தவர்கள் என நாங்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். எரிக்கப்பட்ட கடைகளைக் கொண்டவர்களும், தாக்கப்பட்ட வீடுகளைக் கொண்டவர்களும் எங்களுடைய குடும்பமே என்றும் கெஜ்ரிவால் குறிப்பிட்டிருந்தார்.

.