This Article is From Jul 30, 2018

தொடரும் ஆளுநர் - முதல்வர் மோதல்; திட்ட அறிக்கையை கிழித்தெறிந்த கெஜ்ரிவால்!

சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்படுவதனால் நகரத்தில்குற்றங்கள் குறையும் என முதலமைச்சர் நம்பிக்கை

New Delhi:

புதுடில்லி: டில்லியில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்படுவதற்கான துணை நிலை ஆளுநரின் திட்ட அறிக்கையை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கிழித்தெறிந்தார்.

இந்திரா காந்தி அரங்கில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், நகரத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதினால், குற்ற செயல்கள் குறையும் என்று கூறினார். 

“கடந்த மூன்று ஆண்டுகளாக புதுடில்லியில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்த அரசு முயற்சி செய்து வருகிறது. ஆனால், துணை நிலை ஆளுநரும், பி.ஜே.பி கட்சியும் அதை நடைமுறைப்படுத்த வழிவகுக்கவில்லை” என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

கண்கானிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதை மேற்பார்வையிட புதுடில்லி துணை நிலை ஆளுநர் பைஜால் குழு அமைத்துள்ளார். அந்த குழுவில் அமைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை முதலமைச்சர் நிகழ்ச்சியின் போது வாசித்து காட்டினார்.

அதில், பொது இடத்தில் பொருத்தப்படும் சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்படும் காட்சிகளை கட்டட உரிமையாளரும், சி.சி.டி.வி-யை பதிவு செய்வோரும் உரிய அதிகாரிக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா பொருத்த காவல் துறையின் அனுமதி அவசியமில்லை என கூறிய முதலமைச்சர் அதற்கான உத்தரவு வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போதே, துணை நிலை ஆளுநரின் அறிக்கையை முதலமைச்சர் கிழித்தெறிந்தார். 

“சி.சி.டி.வி கேமரா பொருத்தப்படுவதினால், முழுமையாக குற்றச்செயல்கள் குறையாது. எனினும், 50% குற்றச்செயல்களை குறைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று முதலமைச்சர் கூறினார். புதுடில்லி நகரம் முழுவதும் சி.சி.டி.வி கேமரக்கள் பொருத்தப்படுவதற்கான நடவடிக்கை, விரைவில் மேற்கொள்ளப் படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி அளித்தார்.

.