Read in English
This Article is From Feb 25, 2020

மெலனியா டிரம்பின் "மகிழ்ச்சி வகுப்பு" வருகை குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட்.

இது அரசியல் நிகழ்வல்ல என்பதையும், முற்றிலும் பள்ளி மற்றும் கல்வி குறித்து கவனம் செலுத்துவதே சிறந்தது என்று அவர்கள் அங்கீகரிப்பதை தாங்கள் பாராட்டுவதாக அமெரிக்க தூதரகம் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியிருந்தார்.

Advertisement
இந்தியா

Melania Trump will visit a Delhi government school to see a "happiness class"

New Delhi:

அமெரிக்க அதிபரின் மனைவியான மெலானியா இந்த மகிழ்ச்சி வகுப்பில் பங்கேற்பது எங்களுக்கு சிறந்த நாளாகும். பல நூற்றாண்டுகளாக இந்தியா உலகிற்கு ஆன்மீகத்தினை கற்றுத் தந்திருக்கிறது. மேலும் எங்கள் பள்ளியிலிருந்து மகிழ்ச்சியின் செய்தியினை அவர் நிச்சயம் பெறுவார். என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட் செய்திருந்தார்.

அமெரிக்க அதிபர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் நேற்று இரவு டெல்லியில் தரையிறங்கினர். அதற்கு முன்னதாக அகமதாபாத்திலிருக்கும் உலகின் பெரிய மைதானத்தில் உரை நிகழ்த்தியிருந்தார் என்பதும், அங்கிருந்து ஆக்ராவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்தவாரம் அமெரிக்க தூதரகம், டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா ஆகியோரை டெல்லி அரசுப் பள்ளி நிகழ்விலிருந்து நீக்கியதைக் குறிப்பிட்டிருந்தது. இவர்களுடைய வருகையை அரசியலாக்க விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தது.

இது அரசியல் நிகழ்வல்ல என்பதையும், முற்றிலும் பள்ளி மற்றும் கல்வி குறித்து கவனம் செலுத்துவதே சிறந்தது என்று அவர்கள் அங்கீகரிப்பதை தாங்கள் பாராட்டுவதாக அமெரிக்க தூதரகம் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியிருந்தார்.

Advertisement

திரு சிசோடியா பின்னர் ஒரு அறிக்கையை வெளியிட்டார், அமெரிக்கா வெளிப்படுத்திய கவலைகளை மதிக்கிறேன் என்று கூறினார். "முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் நானும் அதிபரின் மனைவியைத் தில்லி அரசுப் பள்ளிக்கு டெல்லி அரசு சார்பாகத் தனிப்பட்ட முறையில் வரவேற்று மகிழ்ச்சி வகுப்புகள் பற்றிய கருத்து மற்றும் வகுப்பறைகளுக்குச் சென்றபோது மாணவர்களுக்கு அது ஏற்படுத்திய நேர்மறையான தாக்கம் குறித்து அவரிடம் சுருக்கமாகக் கூற விரும்பினேன். இருப்பினும், பள்ளி விஜயத்தின் போது முதல்வர் மற்றும் துணை முதல்வர் தொடர்பாக அமெரிக்கத் தூதரகம் சில கவலைகளை வெளிப்படுத்தியது. நாங்கள் அதை மதிக்கிறோம், "என்று அவர் கூறினார்.

டெல்லி அரசு தனது பள்ளிகளுக்காக உள்கட்டமைப்பு மற்றும் கற்பித்தல் மேம்பாடு உள்ளிட்ட பணிகளை எடுத்துரைத்து வருகிறது.

Advertisement
Advertisement