நேற்று மதியம் முதலே கெஜ்ரிவாலுக்கு உடல்நலம் சரியில்லை என்றும், அப்போதிலிருந்தே யாரையும் அவர் சந்திக்கவில்லை என்றும் கூறுகிறது பிடிஐ.
ஹைலைட்ஸ்
- நேற்று முதல் கெஜ்ரிவாலுக்கு உடல்நலக் குறைவு எனத் தகவல்
- தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் எனத் தகவல்
- இன்று நடக்கயிருந்த சந்திப்புகளை கெஜ்ரிவால் ரத்து செய்துள்ளதாக தெரிகிறது
New Delhi: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்றும் தகவல்கள் வந்துள்ளன. விரைவில் அவர் கொரோனா வைரஸ் சோதனையையும் எடுத்துக் கொள்ள இருக்கிறார் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று நடக்க இருந்த அனைத்து சந்திப்புகளையும் கெஜ்ரிவால் ரத்து செய்துள்ளதாகவும் தெரிகிறது.
நேற்று மதியம் முதலே கெஜ்ரிவாலுக்கு உடல்நலம் சரியில்லை என்றும், அப்போதிலிருந்தே யாரையும் அவர் சந்திக்கவில்லை என்றும் கூறுகிறது பிடிஐ.
தற்போது அவர் டெல்லி முதல்வர் இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார் என்று தகவலை அளிக்கிறது ஏஎன்ஐ செய்தி நிறுவனம்.
நேற்று வீடியோ மூலம் செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால், டெல்லியில் உள்ள மருத்துவமனைப் படுக்கைகள், கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் டெல்லிவாசிகளுக்கே ஒதுக்கப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அப்போது அவர் மாஸ்க் அணிந்திருந்தார்.
டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் சிலருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று தகவல்கள் வந்து கொண்டிருந்த நிலையில்தான், அது குறித்தான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார் கெஜ்ரிவால்.
டெல்லியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக ஒரு நாளைக்கு 1,000 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது வரை அங்கு 27,600 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.