This Article is From Jun 13, 2018

அரவிந்த் கெஜ்ரிவாலின் 3-ம் நாள் போராட்டம், துணை முதலமைச்சர் காலவரையற்ற உண்ணாவிரதம்

துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலின் அலுவலகத்தில் மூன்றாவது நாளாக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்

அரவிந்த் கெஜ்ரிவாலின் 3-ம் நாள் போராட்டம், துணை முதலமைச்சர் காலவரையற்ற உண்ணாவிரதம்

Arvind Kejriwal and his ministers spent another night at Lieutenant Governor Anil Baijal's waiting room.

ஹைலைட்ஸ்

  • மூன்று நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடக்கிறது
  • இன்று துணை முதல்வர் சிசோடியா உண்ணாவிரதம்
  • மக்கள் நலன் கருதி போராட்டம் தொடரும் - கெஜ்ரிவால்
New Delhi: புது டெல்லி: துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலின் அலுவலகத்தில் மூன்றாவது நாளாக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில் கெஜ்ரிவாலுடன் போராடி வரும் துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியாவும், சத்யேந்தர் ஜெயினும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இது பற்றி ட்வீட்டிய முதல்வர் கெஜ்ரிவால், இந்த போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார் திங்கள் முதல் நடந்து வரும் போராட்டத்தில் கெஜ்ரிவால், சிசோடியா, ஜெயின் மற்றும் கோபால் ராய் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதுவரை துணை நிலை ஆளுநரிடம் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

போராட்டத்துக்கான காரணம் என்ன:
  1. டெல்லியின் ஐஏஎஸ் அதிகாரிகள், டெல்லி மாநில அமைச்சர்களுடனான சந்திப்பிற்கு வருவதில்லை. தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷின் மீது நடைப்பெற்ற தாக்குதலில் இருந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்களை சந்திபத்தில்லை என அர்விந்த் கெஜ்ரிவாலும், அவரது அமைச்சர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்..
  2. தங்கள் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று ஐஏஎஸ் அதிகாரிகள் பதிலளித்துள்ளனர். அதே நேரம், அமைச்சர்களுடனான வழக்கமான கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனவும் ஒப்புக்கொண்டனர்.
  3. ஐஏஎஸ் அதிகாரிகள் வழக்கம் போல் தங்கள் பணிகள் செய்து வருவதாக துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் கூறுகிறார். கெஜ்ரிவாலும் அவரது அமைச்சர்களும் தான் அதிகாரிகளுடனான உறவை வலுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
  4. “மோடி அரசின் ரிமோட்டாக ஐஏஎஸ் அதிகாரிகள் செயல்பட்டு, டெல்லி அரசு செய்த நல்ல காரியங்களை மறைக்கப் பார்க்கிறார்கள் . பிரதமரின் உத்தரவு இல்லாமல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணிக்கு திரும்புவார்கள் என்று நினைக்கிறீர்களா? மத்திய அரசு துணை நிலை ஆளுநரை பயன்படுத்தி டெல்லி அரசை பழிவாங்கப் பார்க்கிறது” என கெஜ்ரிவால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்..
  5. முன்னதாக துணை நிலை ஆளுநரிடம், அதிகாரிகள் பணிக்குத் திரும்பாவிட்டால், அவர்கள் மீது எஸ்மா ESMA சட்டத்தை பிரயோகப்படுத்த வேண்டியது இருக்கும் எனறு கெஜ்ரிவால் கூறியுள்ளார். எஸ்மா என்பது அத்தியாவசிய சேவைகளை தடுக்கும் நபர்களை தண்டிக்கும் சட்டமாகும்.
  6. துணை முதலமைச்சர் சிசோடியா, தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது "இன்றில் இருந்து நானும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தைக் தொடங்கியுள்ளேன். டெல்லி மக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுத்து உள்ளேன். நேற்றிலிருந்து சத்யேந்தர் ஜெயின் தனது போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்" என்று பதிவிட்டிருந்தார்.
  7. இந்நிலையில் டெல்லி மாநில எதிர்கட்சியான பா.ஜ.க, டெல்லியில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை அரசு சரி செய்யாததை கண்டித்து கெஜ்ரிவாலின் வீட்டின் முன் பேரணி நட்டத்தப் போவதாகத் தெரிவித்துள்ளது.
  8. இது குறித்து கருத்து கூறிய பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் திரு கெஜ்ரிவாலின் போராட்டம் ஜனநாயகத்தை தவறாக பயன்படுத்தும் முயற்சி என்கின்றனர்.
  9. திங்கள் அன்று கெஜ்ரிவால் தனது அமைச்சர்களுடன், பைஜலை சந்திக்க சென்றனர். டெல்லியில் வீடு வீடாக சென்று ரேஷன் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த ஆணை வழங்கவும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணிக்கு திரும்ப உதவுமாறும் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றனர். ஆனால், அவர் ஒப்புதல் வழங்காததால், அவர்கள் துணை நிலை ஆளுநர் அலுவலக வரவேற்பரையில் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
  10. நிலம், சட்டம் ஒழுங்கு, காவல் துறை ஆகியவற்றின் கட்டுப்பாடு டெல்லி மாநில அரசின் கையில் இல்லை. இது தொடர்பான முடிவுகள் எடுக்க துணை நிலை ஆளுநரின் அனுமதி தேவை. முழு அதிகாரிம் கோரி, கெஜ்ரிவால் கடந்த வாரம் பிரச்சாரத்தை தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.

.