ஆர்யா மற்றும் சாயிஷாவுடன் அல்லு அர்ஜுன் (Image courtesy: Instagram)
ஹைலைட்ஸ்
- ஆர்யா - சாயிஷா திருமணம் இன்று நடக்கிறது
- கஜினிகாந்த படத்தில் ஜோடியாக நடித்தனர்
- காப்பான் படத்தில் ஆர்யா மற்றும் சாயிஷா நடிக்கின்றனர்
New Delhi: நடிகர் ஆர்யா – நடிகை சாயிஷா திருமணம் இன்று நடந்தது. இவர்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஐதரபாத்தில் நேற்று நடந்தது. இதில் நடிகர் சூர்யா, அல்லு அர்ஜுன், நடிகை ஜோதிகா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த வர்து படத்தில் வில்லனாக ஆர்யா நடித்திருந்தார். ‘காப்பான்' படத்தில் சூர்யாவுடன் இணைந்து ஆர்யா மற்றும் சாயிஷா நடித்து வருகின்றனர்.
ஆர்யா – சாயிஷா வரவேற்பு நிகழ்ச்சி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சாயிஷா மற்றும் ஆர்யா தங்களின் சமூக வலைதள பக்கங்களில் அதனைப் பகிர்ந்துள்ளனர்.
அவர்கள் திருமண புகைப்படங்கள்:
மேலும் அவர்கள் திருமண சங்கீத் நிகழ்வுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். சஞ்சய் தத், குஸி கபூர் உட்பட பலர் இதில் பங்கேற்றனர்.
'கஜினிகாந்த' படத்தில் ஜோடியாக நடித்தனர் ஆர்யா - சாயிஷா. தற்போது, காப்பான் படத்தில் கதாநாயகியாக சாயிஷாவும் முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்யாவும் நடித்து வருகிறார்கள்.