This Article is From May 02, 2019

இன்று கொளுத்தப் போகிறது வெயில், என்ன செய்யலாம்..?- ‘தமிழ்நாடு வெதர்மேன்’ அட்வைஸ்

ஃபனி புயல் ஒடிசாவில் கடந்தாலும், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

இன்று கொளுத்தப் போகிறது வெயில், என்ன செய்யலாம்..?- ‘தமிழ்நாடு வெதர்மேன்’ அட்வைஸ்

அவசர நிலை ஏற்படும் பட்சத்தில், மீட்பு மற்றும் நிவாரண உதவிகள் மேற்கொள்ள கடற்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபனி (Fani) புயலானது அதி தீவிரப்புயலாக வலுப்பெற்று ஒடிசாவின் புரி பகுதியில் நாளை மாலை கரையை கடக்க உள்ளது. இதன் காரணமாக ஒடிசா, தமிழகம், ஆந்திர உள்ளிட்ட கடலோர பகுதிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவசர நிலை ஏற்படும் பட்சத்தில், மீட்பு மற்றும் நிவாரண உதவிகள் மேற்கொள்ள கடற்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபனி புயல்(Cyclone Fani) ஒடிசாவில் கடந்தாலும், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

இதையொட்டி பிரபல வாடிலை கணிப்பாளர் ‘தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான், ‘ஃபனி புயல் கரையை நெருங்க உள்ளதால், தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் வெயில் அதிகமாக இருக்கும். பல இடங்களில் வெயில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும். வேலூர் - திருத்தனியை ஒட்டியுள்ள பகுதிகளில் 43 முதல் 44 டிகரி செல்சியஸ் வரை வெயில் இருக்கும்.

3f283tno

திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் 42 டிகிரி செல்சியஸ் பதிவாகும். 

மதுரை, நாமக்கல், திருச்சி, நாகப்பட்டிணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் 41 முதல் 42 டிகிரி செல்சியஸ் பதிவாகும். 

கன்னியாகுமரி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள்தான் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கும். 

சென்னையின் சுற்றுப் புறத்தில் 41 முதல் 42 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகும். 

சென்னையில் 40 டிகிரி செல்சியல் வெயில் இருக்கும். மேற்கு சென்னைப் பகுதிகளான அம்பத்தூர், பூந்தமல்லி, ஆவடி, செங்குன்றம், ஒரகடம், மணிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 41 முதல் 42 டிகிரி செல்சியஸ் வெயில் இருக்கும். 

இப்படி அதிக வெப்பம் இருக்கும் வானிலை நிலவ உள்ளதால் முன்னெச்சரிக்கையாக வெளியே செல்லும்போது, குடை எடுத்துச் செல்வது மற்றும் நிறைய நீர் அருந்துவதை பார்த்துக் கொள்ளவும். வேறு எதுவும் தேவையில்லை. முடிந்தவரை வெளியே செல்வதை தவிர்த்துக் கொள்ளவும்' என்று கூறியுள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.