This Article is From Jun 06, 2019

23 ஐபிஎஸ் அதிகாரிகளை இடம் மாற்றிய ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி

எட்டு மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளர்களும் வேறு சில இடங்களுக்கும் வேறு காவல்துறை பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

23 ஐபிஎஸ் அதிகாரிகளை இடம் மாற்றிய ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி

டிஐஜி தரவரிசையில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளனர்.

Amaravati:

ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராகப் பதவியேற்றபின் 23 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளார். துணை செயலாளர் எல்.வி. சுப்பிரமணியம் இது குறித்த உத்தரவை முதலமைச்சர் மற்றும் பொது காவல்துறை இயக்குநர் கெளதம் சாவாங்கிலிடம் கலந்துரையாடியபின் வெளியிட்டுள்ளார். 

டிஐஜி தரவரிசையில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளான டி. நாகேந்திர குமார், பி. வெங்கடராமமி ரெட்டி, ஏஎஸ்.கான் முதல்வர் டிரிவிக்குமா வர்மா, ஜி . சீனிவாஸ் ஆகியோர் தங்களது பதவிகளில் இருந்து மாற்றப்பட்டு புதிய பதவிகளும் அளிக்கப்பட்டுள்ளது.

எட்டு மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளர்களும் வேறு சில இடங்களுக்கும் வேறு காவல்துறை பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

தேர்தல் கமிஷ்னர் ராகுல் தேவ் ஷர்மா, இப்போது உயர்மட்ட நக்சல் எதிர்ப்பு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கோயா பிரவின் குண்டக்கல் ரயில்வே காவல்துறை அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார். விஷால் குனி பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு துணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 

சித்தூர் மாவட்ட துணை இயக்குநர் எஸ்.பி. விக்ராந்த் பட்டில், விசாகப்பட்டினம் சட்டம் ஒழுங்கு துறையின் டிசிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

.