காவிரி ஆற்றில் வெள்ளம் கரைப்புரண்டோடுவதால், தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாகாவில் பெய்து வரும் கன மழையால், அங்குள்ள அணைகள் நிரம்பி, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் நிரம்பியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கரையோர மாவட்டங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தமிழ்நாடு வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
வெள்ள அபாய எச்சரிக்கையால் ஈரோடு, சேலம், நாமக்கல், போன்ற கரையோர பகுதிகளில் இருக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். ஆற்றங்கரையில் குளிக்கவோ, விளையாடவோ, மீன் பிடிக்க செல்லவோ கூடாது என்று அமைச்சர் அறிவுரை வழங்கினார்.
கோவை, நீலகிரி, தேனி, திருநல்வேலி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.