This Article is From Jun 19, 2019

திரிணாமூலில் இருந்து பாஜக-வுக்குத் தாவும் பிரமுகர்கள்… கொதித்தெழுந்த மம்தா!

அதே நேரத்தில் 2014 தேர்தலில் திரிணாமூல், 34 இடங்களைக் கைப்பற்றியது. ஆனால் இப்போதோ வெறும் 22 இடங்களை மட்டுமே தக்கவைத்துக் கொண்டது. 

திரிணாமூலில் இருந்து பாஜக-வுக்குத் தாவும் பிரமுகர்கள்… கொதித்தெழுந்த மம்தா!

2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது மேற்கு வங்கத்தில் வெறும் 2 இடங்களை மட்டுமே பாஜக கைப்பற்றியது. ஆனால் 2019 தேர்தலில், 18 இடங்களைக் கைப்பற்றியது.

Kolkata:

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் பாஜக-வுக்கு சாதகமாக வந்துள்ளதைத் தொடர்ந்து மம்தா தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலர், பாஜக-வுக்குத் தாவி வருகின்றனர். இதனால் கொதிப்பில் இருக்கும் மம்தா, அணி மாறும் பிரமுகர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். 

அணி தாவும் படலத்தில் சமீபத்தில் பாங்கோனைச் சேர்ந்த திரிணாமூல் கட்சியின் மக்கள் பிரதிநிதி மற்றும் 12 கவுன்சிலர்கள் பாஜக-வில் தங்களை இணைத்துக் கொண்டனர். 

இதைத் தொடர்ந்து மம்தா, “பேராசையிலும் ஊழல் செய்வதற்கும் சிலர் வேறு கட்சிக்கு மாறுவது குறித்து எங்களுக்குக் கவலை இல்லை. தாங்கள் செய்த காரியங்களால் நடவடிக்கைக்கு உள்ளாவர்கள் என்று பயந்து அவர்கள் பாஜக-வில் தங்களை இணைத்துக் கொண்டனர்” என்று பேசியுள்ளார். 

2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது மேற்கு வங்கத்தில் வெறும் 2 இடங்களை மட்டுமே பாஜக கைப்பற்றியது. ஆனால் 2019 தேர்தலில், 18 இடங்களைக் கைப்பற்றியது. இந்த வெற்றியைத் தொடர்ந்துதான் பலர் திரிணாமூல் காங்கிரஸில் இருந்து பாஜக-வுக்கு மாறி வருகின்றனர்.

0ifqev8g

பாங்கோனைச் சேர்ந்த திரிணாமூல் கட்சியின் மக்கள் பிரதிநிதி மற்றும் 12 கவுன்சிலர்கள் பாஜக-வில் தங்களை இணைத்துக் கொண்டனர். 

அதே நேரத்தில் 2014 தேர்தலில் திரிணாமூல், 34 இடங்களைக் கைப்பற்றியது. ஆனால் இப்போதோ வெறும் 22 இடங்களை மட்டுமே தக்கவைத்துக் கொண்டது. 

மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய பிரதமர் மோடி, “மம்தா அவர்களே… உங்களின் 40 எம்.எல்.ஏ-க்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள்” என்று கூறி பரபரப்பைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது. 

மேற்கு வங்கத்தில் நிலவும் இந்த அரசியல் சலசலப்பு குறித்து மம்தா, “ஒருவர் விலகினால், அவர் இடத்தில் 500 பேர் புதியதாக இணைவார்கள். எங்களது கட்சியை நாங்கள் மறுக்கட்டமைப்பு செய்யப் போகிறோம். ஊழல் செய்யும், பேராசை கொண்டவர்களுக்கு பதில் கட்சிக்காக உழைப்பவர்களை நாங்கள் நியமிக்கப் போகிறோம். 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் அதைச் செய்து முடிப்போம்” என்று உறுதிபட தெரிவித்துள்ளார். 


 

.