This Article is From Mar 29, 2019

தேர்தலையொட்டி பணப் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தொகை ரூ.677 கோடி; தமிழகம் பட்டியலில் டாப்!

இதுவரை தமிழகத்தில் மட்டும் 130 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் இன்னபிற சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

தேர்தலையொட்டி பணப் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தொகை ரூ.677 கோடி; தமிழகம் பட்டியலில் டாப்!

ஏப்ரல் 11 ஆம் தேதி ஆரம்பிக்கும் லோக்சபா தேர்தல், 7 கட்டங்களாக மே 19 ஆம் தேதி வரை நடக்கும். தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி வெளியிடப்படும்

New Delhi:

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்திய அளவில் தேர்தல் ஆணையம், சுமார் 677 கோடி ரூபாய்க்கு பணம் உள்ளிட்ட பல்வேறு சொத்துகளை பறிமுதல் செய்துள்ளன. இதில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. இதுவரை தமிழகத்தில் மட்டும் 130 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் இன்னபிற சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

தமிழகத்திற்கு அடுத்த இடத்தில் ஆந்திர பிரதேசம் உள்ளது. ஆந்திராவில் இதுவரை 128 கோடி ரூபாய்க்குப் பணப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மிகவும் அதிக லோக்சபா தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் இதுவரை 120 கோடி ரூபாய்க்குப் பணப் பறிமுதல் செய்துள்ளது தேர்தல் ஆணையம். 

பஞ்சாபைப் பொறுத்தவரை, போதைப் பொருட்களின் கடத்தல் அதிகமாக இருந்துள்ளது எனத் தேர்தல் ஆணையம் கூறுகிறது. அங்கு பறிமுதல் செய்யப்பட்ட பணம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் மதிப்பு சுமார் 104 கோடி ரூபாயாகும். இதில் போதைப் பொருட்களின் பங்குதான் மிக அதிகம் எனப்படுகிறது. 

பட்டியலின் ஐந்தாவது இடத்தில் கார்நாடகா இருக்கிறது. அங்கு இதுவரை 33 கோடி ரூபாய்க்குப் பணப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் சார்பில் 188 தொகுதிகளில் 266 சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பறக்கும் படை, கண்காணிப்புக் குழுக்கள், வீடியோ சர்வெய்லன்ஸ் குழுக்கள் போன்றவையையும் கண்காணிப்புக்குத் தேர்தல் ஆணையம் அமர்த்தியுள்ளதாக தெரிகிறது. 

ஏப்ரல் 11 ஆம் தேதி ஆரம்பிக்கும் லோக்சபா தேர்தல், 7 கட்டங்களாக மே 19 ஆம் தேதி வரை நடக்கும். தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி வெளியிடப்படும். நாடாளுமன்றத் தேர்தலுடன், சில மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலும் நடத்தப்பட உள்ளன. 
 

.