Read in English
This Article is From Jul 05, 2018

பெருகி வரும் ஃபேக் நியூஸ்… முடக்குபோட வாட்ஸ்அப் நிறுவனத்தின் திட்டம்!

இந்திய அளவில் குறுஞ்செய்தி சேவைகளில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்று வாட்ஸ்அப்

Advertisement
இந்தியா (c) 2018 The Washington Post

Highlights

  • வாட்ஸ்அப் மூலம் அதிகமாக ஃபேக் நியூஸ் பரவுவதாக குற்றச்சாட்டு
  • இதையடுத்து, மத்திய அரசு வாட்ஸ்அப்-க்கு எச்சரிக்கை விடுத்துள்ளது
  • ஃபேக் நியூஸ் விவகாரத்தை சரி செய்ய வாட்ஸ்அப் முயற்சி எடுத்துள்ளது
New Delhi:

இந்திய அளவில் குறுஞ்செய்தி சேவைகளில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்று வாட்ஸ்அப். ஃபேஸ்புக்கின் துணை நிறுவனமான வாட்ஸ்அப்-க்கு தற்போது இந்திய சந்தையில் ஒரு பெரும் சிக்கல் உருவாகி வருகிறது. ஃபேக் நியூஸ். எந்த வித உறுதிதன்மையும் இன்றி பரப்பப்படும் வாட்ஸ்அப் குறுஞ்செய்திபளால் பல கலவரங்கள் கடந்த இரு வாரத்தில் இந்திய அளவில் பல்வேறு இடங்களில் நடந்துள்ளது. இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனால் வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் ஒரு எச்சரிக்கை அறிக்கையை அனுப்பியுள்ளது.

வாட்ஸ்அப்-க்கு உள்துறை அமைச்சகம் அனுப்பிய எச்சரிக்கையில், ‘வாட்ஸ்அப் செயலி மூலம் பெரும் அளவிலான மக்கள் கூட்டத்துக்கு பரப்பப்படும் தவறான தகவல்கள் என்பது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. அவற்றை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு வாட்ஸ்அப் நிறுவனம் பதில் கூறுகையில், ‘கடந்த இரு வாரங்களில் ஃபேக் நியூஸ் மூலம் பரப்பப்பட்ட கலவரங்கள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன. இந்த ஃபேக் நியூஸ் விஷயத்தை அரசு, மக்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் சேர்ந்து எதிர்கொண்டால் தான் சரி செய்ய முடியும்’ என்று தெரிவித்துள்ளது.

மத்திய அரசிடமிருந்து இந்த எச்சரிக்கையை அடுத்து, 50,000 டாலர்கள் செலவு செய்து ஃபேக் நியூஸ் விஷயத்துக்கு ஒரு தீர்வை கண்டுபிடிக்க வாட்ஸ்அப் முயற்சி எடுத்துள்ளதாம். இந்த முதலீடு மூலம், ஃபேக் நியூஸுக்கும் உண்மை நியூஸுக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கண்டறிய பிரேசில் மற்றும் மெக்சிக்கோ செய்தி நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு இந்தியாவில் தான் அதிக வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். மேலும், ஒரு நபர் 256 பேர் இருக்கக்கூடிய அளவிலான வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி அதன் மூலம் அதிவேகமாக குறுஞ்செய்திகள் அனுப்ப முடியும் என்பதால், வாட்ஸ்அப் மூலம் ஃபேக் நியூஸ் அச்சுறுத்தல் அதில் அதிகம் உள்ளது.

Advertisement