Panaji: கோவாவில் தொடர்ந்து குறைந்து வரும் சுற்றுலா பயணிகளின் வருகையால் அம்மாநில அரசு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க ஒரு புதிய நடவடிக்கையை கோவாவின் சுற்றுலா துறை எடுத்துள்ளது.
இந்த புதிய திட்டத்தின் படி, கோவாவில் இருக்கும் உணவகங்களின் விலை பட்டியல், சுற்றுலா பயணிகள் தங்கும் லாட்ஜூகள் மற்றும் சிறு ஹோட்டல்களின் விலைகளை குறைத்து, மலிவு விலையில் மக்களுக்கு தரவுள்ளனர்.
மேலும் இந்த புதிய உத்தரவை தொடர்ந்த, கோவாவில் அதிகப்படியாக மக்கள் கூடும் சீசனில், அங்கு இயங்கும் விடுதிகளின் ஆன்லைன் மற்றும் ஆஃவ்லைன் விலைகளை தொடர்ந்து சுற்றுலாத்துறையினர் கவனித்து வருகின்றனர்.
‘நாங்கள் தொடர்ந்து உணவுகளின் விலைகளை கவனித்து வருகிறோம். வரும் பயணிகள் இங்கு வந்தும் விலை உயர்ந்த உணவுகள் உண்டால் அவர்கள் ஏன் இங்கு என் வரவேண்டும் என்று நினைப்பார்கள்? அதனால் உணவின் விலை ரூபாய் 500 க்கும் மேல் போகாமல் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை வைக்க வேண்டும். மேலும், இது போன்ற அதிக விலை வைத்து செயல்படும் வியாபாரிகள் இங்கு வேண்டாம்' என கடந்த வியாழக்கிழமையன்று கோவாவின் சுற்றுலா துறை அமைச்சர் மனோஹா ஆஜிகனோன்கார் கூறினார்.
இந்த திடீர் நடவடிக்கைகள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததால் எடுக்கப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் இந்த நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படவுள்ளது.