This Article is From Jan 14, 2020

பாஜகவும் - காங்கிரசும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்: ஒவைசி கடும் தாக்கு!

ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி காங்கிரஸை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர்கள் மதச்சார்பின்மை பற்றி பேசுவார்கள் ஆனால், பாஜகவும் - காங்கிரசும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் தான் என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒவைசி பேசினார்.

Sangareddy:

தெலுங்கானாவில் நடைபெற உள்ள நகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவர்களிடம் பணத்தை வாங்கி விட்டு தனது கட்சிக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கேட்டுக்கொண்டுள்ளார். 

தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, காங்கிரஸை கடுமையாக விமர்சித்தார். அவர்கள் மதச்சார்பின்மை பற்றி பேசுவார்கள் ஆனால், பாஜகவும் - காங்கிரசும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் தான் என்று அவர் கூறினார். 

காங்கிரஸூக்கும் பாஜகவுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. காங்கிரஸ் கட்சி ஆர்எஸ்எஸ்-ஐ தனது இதயத்தில் வைத்துள்ளது, பாஜகவுக்கு அதை மனதில் வைத்துள்ளது. அவர்கள் மதச்சார்பின்மை பற்றி பேசுவார்கள். 

மூளை, இதயம் மற்றும் நாக்கு உள்ளிட்ட மூன்றும் ஒரே கட்டத்தில் இருக்க வேண்டும். அப்போது தான் இதயம் பேசும்போது, மூளை அதை ஒப்புக்கொண்டு, நாக்கு பேசும் என்றார். 

Advertisement

வரும் ஜன.22ம் தேதி உங்கள் வாக்குகளை சரியாக பயன்படுத்துங்கள். காங்கிரஸில் உள்ளவர்களிடம் நிறைய பணம் உள்ளது. அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள். ஆனால், எனக்கு வாக்களியுங்கள். அவர்கள் உங்களுக்கு பணம் கொடுத்தால் பெற்றுக்கொள்ளுங்கள். எனது மதிப்பு ரூ.2000 அல்ல, அதையும் விட கூடுதலானது. காங்கிரசிடம் விலையை ஏற்றுமாறு கூறுகிறேன் என்றார். 

நகராட்சி தேர்தலானது ஜன.22ம் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து, முடிவுகள் ஜன.25ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. 
 

Advertisement
Advertisement