This Article is From Aug 14, 2019

பிரதமர் மோடி, அமித்ஷாவை புகழ்ந்த ரஜினி... போர்க்கொடி தூக்கும் ஒவைசி!

Rajinikanth: ரஜினியின் கருத்துக்கு முன்னதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கண்டனம் தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடி, அமித்ஷாவை புகழ்ந்த ரஜினி... போர்க்கொடி தூக்கும் ஒவைசி!

Asaduddin Owaisi: “தற்போது இருக்கும் அரசானது, காஷ்மீரிகள் மீது அன்பு கொண்டிருக்கவில்லை. காஷ்மீரின் நிலத்தின் மீதுதான் அன்பு கொண்டிருக்கிறது."

Hyderabad:

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth), சென்னையில் நடந்த ஓர் நிகழ்ச்சியில் பேசும்போது, “பிரதமர் மோடியும் (Modi) அமித்ஷாவும் (Amit Shah) கிருஷ்ணரும் அர்ஜுணரும் போல” என்றார். அவர் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கும் பிரதமர் மோடி அரசுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். இதற்கு ஐதராபாத் எம்.பி., அசாதுதீன் ஒவைசி எதிர்ப்பு தெரிவித்து, “யார் பாண்டவர்கள், கவுரவர்கள்?” என்று கேள்வியெழுப்பியுள்ளார். 

ரஜினி (Rajini) நிகழ்ச்சியில் மேலும் பேசும்போது, “இருவரும் கிருஷ்ணர், அர்ஜுணர் போல என்றாலும், யார் கிருஷ்ணர், யார் அர்ஜுணர் என்று தெரியவில்லை. அது அவர்களுக்குத்தான் தெரியும்” என்றார். 

இந்நிலையில் ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர், ஐதராபாத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில் பேசுகையில், “ஜம்மூ காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு சட்டப் பிரிவு ரத்து செய்யப்படதற்கு ரஜினிகாந்த், அமித்ஷாவையும் மோடியையும் கிருஷ்ணரும் அர்ஜுணரும் என்று கூறியுள்ளார். அப்படியென்றால் யார் பாண்டவர்கள், யார் கவுரவர்கள். நாட்டில் இன்னொரு மகாபாரதம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறாரா ரஜினி” என்று கருத்து தெரிவித்துள்ளார். 

முன்னதாக காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து குறித்து பேசியிருந்த ஒவைசி (Owaisi), “இந்திய அரசு, காஷ்மீர் வரலாற்றில் மூன்றாவது மிகப் பெரிய தவறிழைக்கிறது. முதலில் 1953 ஆம் ஆண்டு ஷேக் அப்துல்லாவை இந்திய அரசு கைது செய்தது. பிறகு, 1987 ஆம் ஆண்டு தேர்தல்களில் தலையிட்டது. தற்போது ஜம்மூ காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மூன்றாவது தவறை இழைத்துள்ளது” என்று தெரிவித்திருந்தார். 

அவர் மேலும், “தற்போது இருக்கும் அரசானது, காஷ்மீரிகள் மீது அன்பு கொண்டிருக்கவில்லை. காஷ்மீரின் நிலத்தின் மீதுதான் அன்பு கொண்டிருக்கிறது. அவர்களுக்கு அதிகாரம் மீதுதான் பற்று. நீதியின் மீது பற்று கிடையாது. அவர்களுக்கு அதிகாரத்தில் இருப்பதுதான் முக்கியம். நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன், யாரும் சாகாவரம் பெற்றவர்கள் இல்லை. எப்போதும் ஆட்சி செய்து கொண்டே இருக்கப் போவதில்லை” என்று விரிவாக பேசினார்.

ரஜினியின் கருத்துக்கு முன்னதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கண்டனம் தெரிவித்திருந்தார். “கோடான கோடி மக்களின் உரிமைகளைப் பரித்தவர்கள் எப்படி கிருஷ்ணரும் அர்ஜுணருமாக இருக்க முடியும். அன்புள்ள ரஜினிகாந்த், மகாபாரதத்தை மீண்டும் நீங்கள் படிக்க வேண்டும்” என்று அழகிரி கூறியிருந்தார். 


 

.