বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Jun 19, 2019

ஜெய் ஶ்ரீராம்களுக்கு மத்தியில் ஒலித்த ஜெய்பீம் - நாடாளுமன்றத்தை அதிர வைத்த ஓவைசி

ஓவைசி அலட்சியமாக,  சிரித்தவாறே இன்னும் சத்தமாகக் கூறுங்கள் என்பது போல் கையால் சைகை செய்தார்.

Advertisement
இந்தியா Edited by (with inputs from Agencies)

Highlights

  • பாஜக அமைச்சர்கள் ஜெய் ஶ்ரீ ராம் என்று முழங்கினார்கள்
  • ஓவைசி பதவியேற்பின் போது ஜெய்பீம் என்றும் தக்பீர் அல்லாஹூ அக்பர் என்றார்.
  • ஓவைசி 4 வது முறையாக ஹைதராபாத்தில் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்
New Delhi:

17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. மக்களவை உறுப்பினர்கள் நேற்று முதல் பதவியேற்று வருகின்றனர். இதில் அனைத்திந்திய மஜ்லிஸ்- ஈ- இத்ஹதுல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஓவைசியைப் பதவியேற்க அழைக்கப்பட்டார். 

ஓவைசி நான்காவது முறையாக ஹைதராபாத்தில் வெற்றி வாகை சூடி எம்.பி-யாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ஓவைசி பதவியேற்க வந்தபோது பா.ஜ.க உறுப்பினர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்', 'பாரத் மாதா கீ ஜே', 'வந்தே மாதரம்' என முழங்கினர். ஓவைசி அலட்சியமாக,  சிரித்தவாறே இன்னும் சத்தமாகக் கூறுங்கள் என்பது போல் கையால் சைகை செய்தார்.

 பின்னர் அவர் உருது மொழியில் பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்பின்போது  ஜெய்பீம், தக்பீர் அல்லாஹு அக்பர், ஜெய்ஹிந்த் என்றார். இதனைத் தொடர்ந்து, 'வந்தே மாதரம்' என பா.ஜ.க-வினர் முழங்கினர். 

Advertisement

நாடாளுமன்றத்திற்கு வெளியே  செய்தியாளர்களைச் சந்தித்த அசாசுதீன் ஓவைசி, “ ஒருவகையில் இதுவும் நல்லதுதான் என நினைக்கிறேன். அவர்கள் என்னைப் பார்க்கும்போது இந்த நிகழ்வுகள் ஞாபகத்திற்கு வரும். அவர்கள் இந்த அரசியலமைப்பையும் முசாபர்பூரில் குழந்தைகள் இறந்த விவகாரத்தையும் நினைவில் வைத்திருப்பார்கள் என நம்புகிறேன். இந்த விவகாரத்தை நான் கவனித்துக்கொண்டிருக்கிறேன் என்றார்.

Advertisement