This Article is From Jan 08, 2019

''நாட்டை ஆள்வது 2 பேர்தான்'' - காங்கிரஸ் தலைவர் சொல்லும் அவர்கள் யார்?

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ளள ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பாஜகவில் இருந்து பலர் விலகி விடுவார்கள் என்று கூறியுள்ளார்.

''நாட்டை ஆள்வது 2 பேர்தான்'' - காங்கிரஸ் தலைவர் சொல்லும் அவர்கள் யார்?

பாஜகவிடம் பண பலம் இருக்கிறது. ஆனால் அரசியல் தர்மம் இல்லை என்கிறார் கெலாட்.

Jaipur:

நாட்டை ஆள்வது 2 பேர்தான் என்று பாஜகவில் இருப்பவர்களே நம்பத் தொடங்கி விட்டார்கள் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.
ஜெய்ப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அசோக் கெலாட் கூறியதாவது-

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி சமீபத்தில் பேசியபோது, சில கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் கட்சியை கரைத்து விடுவார்கள் என்று பேசினார். பாஜக தலைவர்கள் வெறுமனே பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு காரியமும் பாஜகவால் உருப்படியாக செய்யப்படவில்லை என்று மக்கள் உணர்ந்து விட்டனர்.

நாட்டை ஆள்வது பிரதமர் மோடியும் பாஜக தலைவர் அமித்ஷாவும்தான் என்று பாஜகவில் இருப்பவர்களே நம்பத் தொடங்கி விட்டனர். பாஜகவிடம் பண பலம் இருக்கிறது. ஆனால் அரசியல் தர்மம் என்று எதுவுமே இல்லை.

பாஜக வெறுமனே தம்பட்டம் அடிக்கிறது. அக்கட்சியால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் அவர்கள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விமர்சிக்கத் தொடங்கி விட்டனர். காங்கிரஸ் ஆதரவு அலை வீசப்போவதை நீங்கள் காண்பீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

.