Jaipur: ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வரும் அரசியல் குழப்பங்கள் தற்போது உச்சக்கட்டத்தினை எட்டியுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியின் துணை முதல்வரான சச்சின் பைலாட் முதல்வருடனான மோதல் போக்கின் ஒரு பகுதியாக 19 எம்.எல்.ஏக்களை தனக்கு ஆதராவக பிரித்துள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்து வந்த கூட்டணி கட்சியின் எம்.எல்.ஏக்கள் தங்களது ஆதரவினை திரும்ப பெற்ற நிலையில் தற்போது மீண்டும் ஆதரவளித்துள்ளதாக முதல்வர் அசோக் கெஹ்லோட் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
"பாரதிய பழங்குடியினர் கட்சியின் (பி.டி.பி) இரு எம்.எல்.ஏக்களும் தங்கள் மாநில நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளுடன் கலந்துரையாடிய பின்னர் அரசாங்கத்திற்கு தங்கள் ஆதரவை அறிவித்தனர்" என்று கெஹ்லோட் இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.