This Article is From Apr 23, 2019

சாதிக்க வறுமை தடையில்லை:  ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக கிராமத்து பெண்

2013இல் அப்பா புற்றுநோயால் இறந்து விட தன்னுடைய லட்சியத்தை  அடைய கூடுதல் உத்வேகத்துடன் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Posted by

23-வது சர்வதேச ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் 800 மீட்டர் தடகளப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த கோமதி தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். 

கோமதி தங்கம் திருச்சிக்கு அருகில் உள்ள முடிகண்டம் என்ற பகுதியைச் சேர்ந்தவர். பின் தங்கிய அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத கிராமத்தை சேர்ந்தவர். கிராமத்தில் விளையாட்டு மைதானம் கூட கிடையாது. 20 கி.மீட்டர் தொலைவில் உள்ள மைதானத்துக்குச் சென்று பயிற்சி எடுத்துள்ளார்.

2013இல் அப்பா புற்றுநோயால் இறந்து விட தன்னுடைய லட்சியத்தை  அடைய கூடுதல் உத்வேகத்துடன் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

தன்னுடைய கல்லூரிக் காலத்திலும் தடகள விளையாட்டில் பங்கேற்று பல பதக்கங்களை பெற்றுள்ளார்.  எளிய குடும்பத்தில் பிறந்து  இன்று இந்தியாவையே தன் திறமையால் தலைநிமிரச் செய்துள்ளார் கோமதி . இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் கோமதியின் ஊரை நோக்கியும் அவரின் வாழ்வியலைக் காட்டியும் வருகிறது. தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் பலரும் கோமதிக்கு வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் கோமதிக்கு தன் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தினை தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement
Advertisement